தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
முப்பெரும்விழா தலைமை விருந்தினருக்கு நேரில் அழைப்பு!

முப்பெரும்விழா தலைமை விருந்தினருக்கு நேரில் அழைப்பு!

Radheyan 12 Jan 2023 | 03:43 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஜனவரி'29-இல் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழா-வுக்கான அழைப்பிதழை விழாவின் தலைமை விருந்தினர் மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களிடம் சங்கத்தின் மூத்த ஆலோசகர் ஆசிரியர் நல்லையா வழங்கினார்.

முன்னதாக நேற்று முன்தினம் (10.01.2023) அமைச்சரை சந்தித்து அழைப்பிதழ் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென முதலமைச்சரிடமிருந்து அமைச்சருக்கு அழைப்பு வந்ததையடுத்து சந்திக்கமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு நடைபெறாத நிலையில், அமைச்சரே நேரடியாக தொடர்பு கொண்டு, மாலை 7 மணிக்கு வருமாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அமைச்சரை சந்திக்க சென்றிருந்தனர். 

அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, முறைப்படி நேரடியாக சந்தித்து அனுமதி கோராத நிலையிலும், உரிமையோடு தன் பெயரை தலைமை விருந்தினராக அழைப்பிதழில் போட்டுக்கொள்ளவும்,  பங்கேற்கவும் சம்மதித்த மாண்புமிகு அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் பொதுச்செயலாளர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 

இந்த சந்திப்பின்போது நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, திருச்செங்கோடு சரவணன், கார்த்திகேயன், ஆறுமுகச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kkssr thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண