தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தாருக்கு உரிய வாய்ப்பு வழங்குக! நகர்ப்புற வளச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் முறையீடு!

இராஜகம்பளத்தாருக்கு உரிய வாய்ப்பு வழங்குக! நகர்ப்புற வளச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் முறையீடு!

Radheyan 14 Jan 2023 | 01:35 PM
பகிர்:

தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழ் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.என்.நேரு அவர்களிடம் வழங்கப்பட்டது. 

கடந்த புதன்கிழமை (11.01.2023) அன்று நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் அமைச்சரது இல்லத்தில் சந்தித்து முப்பெரும்விழா அழைப்பிதழை வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட அமைச்சர் இவ்விழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார். 

மேலும், இந்த சந்திப்பின்போது மேற்கு மாவட்டங்களில் கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றி, பல்வேறு போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு. கழகத்திற்காக அரும்பாடுபட்டு வரும் இராஜகம்பளத்தாருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதை அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். இதற்கு பதிலளித்த அமைச்சர், கட்சிக்காக உழைப்பவர்கள் கைவிடப்படுவதில்லை என்றும், எனது கவனத்திற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், தகுதி, திறமையானவர்களுக்கு கழகம் உரிய வாய்ப்புகள் வழங்குமென்று உறுதியளித்தார்.

அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், திருச்செங்கோடு சரவணன், ஆறுமுகசாமி, திருப்பூர் நாகேந்திரன் உள்ளிடோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு K.N.Nehru thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண