தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தமிழக அரசின் திரு.வி.க  விருது!எழுத்தாளுமை பெ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!

தமிழக அரசின் திரு.வி.க விருது!எழுத்தாளுமை பெ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!

Radheyan 16 Jan 2023 | 01:18 PM
பகிர்:

திருவள்ளுவர் திருநாளான இன்று தமிழ்நாடு அரசு சார்பில்  சிறந்த தமிழ் ஆளுமைகளுக்கு திருவள்ளுவர், பெரியார், அண்ணா, கி.ஆ.பெ உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்படுகிறது. 

இந்த வரிசையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க.பெயரில் அமைந்துள்ள விருதுக்காக இந்த ஆண்டு பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான நாமக்கல் பெ.வேல்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இன்றுகாலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுத்தாளுமை நாமக்கல் பெ.வேல்சாமி அவர்களுக்கு வழங்குகிறார். 

இராஜகம்பளத்தார் வம்சத்தில் தோன்றி சாதி,மத,இன,மொழி பேதங்கள் கடந்து தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் தன்னை முழுமையாக அற்பணித்து வாழும் திரு.பெ.வேல்சாமி அவர்களும்,  இதேபோன்று தமிழுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் சமரசமின்றி எழுத்துலகிலும், களத்திலும் போராடி வருபவர்கள் பலரும் இன்று தமிழக அரசின் விருதினை வழங்கி விருதுக்கு  பெருமை சேர்க்கின்றனர். 

சிறந்த ஆளுமைகளை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், தமிழக முதல்வருக்கும் நன்றியும்,  விருது பெரும் நாமக்கல் பெ.வேல்சாமி உள்ளிட்டோருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Namakkal-p-velsamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண