தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
வேங்கடகிரி, நெல்லூர் உறவுகளுக்கு முப்பெரும்விழா அழைப்பிதழ்!

வேங்கடகிரி, நெல்லூர் உறவுகளுக்கு முப்பெரும்விழா அழைப்பிதழ்!

Radheyan 23 Jan 2023 | 01:22 AM
பகிர்:
வேங்கடகிரி, நெல்லூர் உறவுகளுக்கு முப்பெரும்விழா அழைப்பிதழ்!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழா வுக்கான அழைப்பிதழ் ஆந்திர மாநிலம் வேங்கடகிரி, நெல்லூர் கம்பளத்து உறவுகளுக்கு வழங்கப்பட்டது. 


சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய  நலச்சங்கம் சார்பில், முதன்முதலாக கட்டுமானப்பணி தொடங்கப்பட்ட பொழுது, பெருமளவு நிதியுதவி வழங்கி சங்கம் வளர காரணமாக இருந்தவர்கள், நெல்லூர், வேங்கடகிரியில் வாழும் கம்பளத்து உறவுகள். அவர்களின் உதவியை கௌரவிக்கும் விதமாக, முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழை நேரில் வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. 


சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வெளியூர் சுற்றுப்பயணங்களில் இருந்ததால், நெல்லூர் பயணம் காலதாமதாமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் விழா நாள் நெருங்கி வந்துவிட்ட நிலையில் , நேற்று மாலை திருப்பதி மேயரை சந்தித்துவிட்டு திரும்புகையில், இரவு வேங்கடகிரி சென்று அங்குள்ள உறவுகளுக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 


அதன் பின்னர் இரவு நெல்லூர் சென்ற குழுவினர் இன்று காலை முதல் மாலை வரை சன்டே மார்க்கெட், மினி மார்க்கெட், பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பல தரப்பட்ட உறவுகளை சந்தித்து முப்பெரும்விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. 


இன்றைய சுற்றுப்பயணத்தின் போது பொருளாளர் எஸ்.இராமராஜ், இளைஞரணி தலைவர் நல்லுசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி ஆகியோரோடு சன்டே மார்க்கெட் செந்தில்குமார், பெருமாள், முத்துமாரி, சரவணன், சர்க்கரை நாயக்கர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Venkadagiri nellore thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண