தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
காஸ்மோபாலிடன் கிளப்பில் முப்பெரும்விழா இறுதிகட்ட ஆலோசனை!

காஸ்மோபாலிடன் கிளப்பில் முப்பெரும்விழா இறுதிகட்ட ஆலோசனை!

Radheyan 27 Jan 2023 | 04:50 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தோழமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவுள்ள முப்பெரும்விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


1873-இல் தொடங்கப்பட்ட இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்களில் ஒன்றான சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர்.இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் வந்து தங்கிச்சென்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிளப்பில் உறுப்பினராக சேர்வதற்கான கட்டணம் இன்றைய தேதியில் ரூ.18,00,000/- (பதினெட்டு லட்சம் மட்டும்) என்பது குறிப்பிடத்தக்கது.


மதிப்புமிக்க இக்கிளப்பில் உறுப்பினராகவும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகராகவுமுள்ள Rtn.PHF.C.முத்துசாமி அவர்களுக்கான பிரத்யோக உரிமையில், இலவசமாக வழங்கப்பட்ட பகுதியில் இந்த ஆலோசனைக்கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது. இதில் விழா தொடக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து நிகழ்வுகளுக்குமான ஏற்பாடுகள், தன்னார்வலகள், வரவேற்பாளர்கள், மதிய உணவு, இரவு டின்னர் என எல்லா விசயங்களிலும் கலந்துகொண்டவர்களின் ஆலோசனை பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

ஆலோசனையின் முடிவில் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காஸ்மோபாலிடன் கிளப்பின் மற்றொரு உறுப்பினரும், திரு.முத்துசாமி அவர்களின் மகனுமான M.சரண்யன் சார்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது. 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Cosmopoliton Club thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண