தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
முகவரியற்றோர் நடத்திய முப்பெரும்விழா முழுமையான வெற்றி! இளம் தலைமுறைக்கு வெற்றி சமர்ப்பனம்!

முகவரியற்றோர் நடத்திய முப்பெரும்விழா முழுமையான வெற்றி! இளம் தலைமுறைக்கு வெற்றி சமர்ப்பனம்!

Radheyan 31 Jan 2023 | 05:26 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தோழமை அமைப்புகளின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும்விழா அனைவரும் பாராட்டத்தக்க வகையில் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்துள்ளது.


இந்த முப்பெரும் விழாவின் ஒவ்வொரு நிகழ்வுகளும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உறவுகளிடமிருந்து நிர்வாகத்திற்கு தொடர்ந்து வரும் அழைப்புகள் உறுதிசெய்கிறது. அதேவேளையில் சமுதாய உறவுகள் மற்றும் போலி தமிழ்தேசியவாதிகளால் சமூக ஊடகங்களில் வைக்கப்படும் ஏதிர்மறையான விமர்சனங்கள், கம்பளத்தார் சமுதாயம் தாண்டி அரசியல் களத்திலும் அதிர்வலைகளை உருவாக்கியிருப்பதை உணரமுடிகிறது. 


கம்பளத்தார் நடத்திய ஒருவிழா மூலம் பொதுச்சமூகத்தில் அரோக்கியமான தாக்கத்தையும், கவனத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்திருப்பதின் மூலம் சமூகத்தை பொதுவெளியில், அரசியல் அரங்கில் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியுள்ளது.

தவிர, இதுவரை கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் மட்டுமே கூட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில், கம்பளத்தார் வசிக்கும் மாவட்டங்களுக்கும், விழா நடைபெறும் இடத்திற்குமான சராசரி தூரம் 400 முதல் 500 கி.மீ என்றபோதிலும், குறைந்த அளவிலேயே குடியேற்ற நடந்துள்ள தலைநகர் சென்னையில் விழாவினை நடத்தியிருப்பதும், ஆளுமைமிக்க நாடறிந்த, ஏடறிந்த தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற எந்தவித அரசியல் பின்னனியும்  இல்லாமல் எளிய, சாமானியர்களால் நிர்வகிக்கப்படும் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அழைப்புவிடுக்கப்பட்ட இந்த முப்பெரும்விழாவில், அரசியலில் குறிப்பிடத்தக்க பதவிகளிலுள்ள தலைவர்களும், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும், நன்கொடை வழங்கியதோடு நில்லாமல் சொந்த செலவில் நெடுந்தூரம் பயணித்து கலந்து கொண்டது, சங்கத்தின் மீதான மக்களின் நன்பதிப்பு, மக்களிடன் தேங்கியுள்ள சமுதாய உணர்வு, தலைவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை, சமுதாயம் வெற்றிப்பாதையில் மீண்டும் அடியெடுத்து வைக்க வேண்டும் அக்கறை ஆகியவற்றை ஒருசேர வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.


மேலும், விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நான்கு உள்ளூர் அமைச்சர்களில் இருவரும், சென்னை மாநகர துணை மேயரும் கலந்து கொண்டது, விழாவிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்ல, கம்பளத்தார் மீதான அமைச்சர்களின் கரிசனத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக அழைப்பு விடுக்கப்பட்ட நான்கு அமைச்சர்களில் மூவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, அங்கேயே தங்கியிருந்து தேர்தல் பணிகளை முழுவீச்சில் முடிக்கிவிட்டு வரும் நிலையில், நேர நெருக்கடிகளும் மத்தியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பெருமை சேர்த்த மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளது.

மேலும், முப்பெரும் விழாவிற்கு இரவு பகலாக பாடுபட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தோழமை அமைப்புகளின் தலைவர்கள், நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை சமுதாய நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முப்பெரும் விழாவின் வெற்றியை இளம்தலைமுறைக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சமர்ப்பனம் செய்துள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mupperumvizha2023 thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண