தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அமைச்சருடன் ஈரோடு மாவட்ட இராஜகம்பள சமுதாய தலைவர்கள் சந்திப்பு!

அமைச்சருடன் ஈரோடு மாவட்ட இராஜகம்பள சமுதாய தலைவர்கள் சந்திப்பு!

Radheyan 13 Feb 2023 | 11:56 PM
பகிர்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்காக ஈரோட்டில் முகாமிட்டுள்ள மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களை ஈரோடு மாவட்ட இராஜகம்பள சமுதாய தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


இதுகுறித்து ஈரோடு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியை திறந்து வைத்து, மக்களாட்சியில் இராஜகம்பளத்தார் மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 


தலைநகர் சென்னையில் முதன்முறையாக மிகபிரமாண்டமாக நடைபெற்ற முப்பெரும்விழாவில் கலந்துகொண்டு கம்பளத்தாருக்கு பெருமை சேர்த்த அமைச்சரை சந்தித்து ஈரோடு மாவட்ட இராஜகம்பளத்தார் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டர். அமைச்சருடனான இந்த சந்திப்பில் செண்பகப்புதூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் V. N. சின்னச்சாமி, அந்தியூர் ஒன்றியக்கழக துணைச்செயலாளர் நாகேஷ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லுசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், செண்பகப்புதூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் சௌந்தர்யா தாண்டவமூர்த்தி, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. சிரஞ்சீவி, கிளை கழக பிரதிநிதி திரு. ரவிச்சந்திரன், கிளை கழக பொறுப்பாளர் திரு. செந்தில், மக்கள் நலப் பணியாளர் திரு. M. C . சின்னராஜ், சத்தியமங்கலம் இளைஞர் அணி செயலாளர் திரு. விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kkssr thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண