தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
கட்டபொம்மன் அகாடமி - முத்தான முதல் பத்து மாணவ-மாணவியர் தேர்வு!

கட்டபொம்மன் அகாடமி - முத்தான முதல் பத்து மாணவ-மாணவியர் தேர்வு!

Radheyan 19 Feb 2023 | 05:45 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை சார்பில் கடந்த ஜனவரி-29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட கட்டபொம்மன் அகாடமி சார்பில் குரூப் சர்வீஸ் தேர்வர்களுக்கான பயிற்சிக்கு முதல் பேட்ஜ் மாணவ-மாணவியர் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்டபொம்மன் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமியும், அண்ணாநகரில் அமைந்துள்ள மேத்தா ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து நடத்தும் குரூப் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி முகாமுக்காக நடத்தப்பட்ட பலகட்ட தேர்வில் முடிவில் இறுதியாக பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மத்திய பொதுப்பணித்துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளருமான பெ.இராமராஜ் ஆகியோர் தகுதிவாயந்த மாணவர்கள் பட்டியலை இறுதி செய்து கட்டபொம்மன் அகாடமிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்ப பொருளாதார சூழல், தேர்வின் மீதான ஆர்வம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிற்சிக்கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. இதில் கண்டிப்பாக உதவி தேவைப்படுவோருக்கு முழுமையான கட்டண விலக்கும்,   மற்றவர்களுக்கு 50 முதல் 75 சதவீத கட்டண விலக்கும் அளிக்கப்படவுள்ளது. முதற்கட்ட பட்டியலில் தேர்வாகியுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு,

1. E.பழனிவேல். B.E., Mech

2. ஜீவரத்னா.M.E.,

3. கனகா. B.E., Civil

4.பூபதிராஜா.B.Com.,

5.தேவிசித்ரா.B.E., Comp

6. திவ்யா. B.Sc., Maths

7.தாமரைச்செல்வன். B.Sc., Comp

8.சுகன்யா.B.Com.,

9.சுவாதி.M.A.,B.Ed.,

10.விஜயகுமார். B.Sc., Chemistry.

இறுதிகட்ட தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. வகுப்புகள் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kattabomman acadamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண