🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கர் வெறுப்புக்கு ஈரோட்டில் இடமில்லை! புறக்கணித்த தமிழ்குடி மக்கள்!

தமிழ்தேசியம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியிலிருந்து அவ்வப்போது தலைவர்கள் உருவாகி திராவிட கருத்தியலுக்கு எதிராக, ஹெலுங்கர்கள் மீது வெறுப்பை உமிழும் போக்கு நீண்ட காலமாக  தமிழகத்தில் இருந்து வருகிறது. அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள, இறையாண்மைமிக்க  இந்திய தேசியத்தின் பெயரால் அமைந்துள்ள மைய அரசை எதிர்த்து தங்கள் உரிமைகளுக்காக பேசவும் போராடவும் வேண்டியவர்கள், வரையறுக்கப்பட்ட, குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டுள்ள மாநில அரசையும், திராவிட இயக்க கருத்தியலை எதிர்ப்பதுபோல் தெலுங்கு மொழி பேசும் மக்களை குறிவைத்து வெறுப்பு அரசியலை நடத்துகின்றனர். தெலுங்கர்களை எதிர்ப்பதால் எப்படி தமிழ்தேசியம் அமையும் என்பதை அக்கட்சியில் உள்ளவர்களுக்கே விளங்கவில்லை. தற்போது தமிழ்தேசியத்தை கையில் எடுத்திருக்கும் சீமான், திரைப்படங்களை இயக்கி வெற்றிபெறமுடியாமல், தெருவில் மேடைபோட்டு விதவிதமான பொய், புரட்டுகளை கூறும்போது, புல்லரித்துப்போய் மெய்மறந்து விசிலடிக்கும் ஒரு அடிப்படை அறிவற்ற கூட்டத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெலுங்குமொழிபேசும் அருந்ததியினர் மக்கள் குறித்து அவதூறாக பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளானார். அந்தத்தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள முதலியார் சமுதாயத்திலிருந்து வேட்பாளரை நிறுத்தி, தெலுங்கர்களை விமர்சித்துப்பேசி பெரும் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று கணக்குப்போட்ட சீமானுக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் முகத்தில் கரியைப்பூசி உள்ளனர். ஏறக்குறைய 50 ஆயிரம் முதலியார் வாக்குகளை குறிவைத்து சீமான் போட்ட டிராமாவை புறந்தள்ளியுள்ள முதலியார் சமுதாயமும், கவுண்டர், நாடார்,பிள்ளை, கொங்கு செட்டியார் உள்ளிட்ட தமிழ்குடி மக்களும், சீமானின் பிரச்சாரத்துக்கு வாக்குகள் மூலம் பதிலளித்துள்ளனர். இதனால்  2021 சட்டமன்றத் தேர்தலைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளார்.

சீமானின் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் தெலுங்கு சமுதாய மக்களை எதிரிகளாக மையப்படுத்தி நடக்கும் அரசியல் மிகவும் ஆபத்தானது, கேவலமானது, பிற்போக்குத்தனமானது என்று கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கர்களுக்கு எதிரான அரசியலை இப்படியே இனி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு கடும் எதிர்வினையாற்றுவோம் என்று பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியினரின் இனவாத அரசியலுக்கு முடிவுரைகட்டியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இனம், மொழி, மதத்தை வைத்து செய்யும் அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் வெல்லப்போவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அரசியலில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள் வெறுப்பு அரசியல் பக்கம் சென்று தங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக்கொள்ளாமல், தமிழ் மண்ணிற்கேற்ற அரசியல் செய்யும் இயக்கங்களில் இணைந்து நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved