தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மூச்சுவிட திணறலா? உலக ஆஸ்துமா தினம் இன்று!

மூச்சுவிட திணறலா? உலக ஆஸ்துமா தினம் இன்று!

Radheyan 02 May 2023 | 11:29 PM
பகிர்:

ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு அவசர காலத்தில் உதவக்கூடிய சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

காற்று மாசுபாடு, குளிர் காலநிலை, புகை, செல்லப் பிராணிகள் சலவாய், முடி உள்ளிட்டவற்றால் ஏற்படும் சில தூண்டுதல்கள், காற்றுப்பாதைகளை வீங்கச் செய்து ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா பிரச்சினையால் திடீரென மூச்சு விடுவதில் சிரமம், திணறல் ஏற்படுகிறது, ஆனால் கையில் இன்ஹேலர் எதுவும் இல்லையென்றால் உடனே பதட்டம் அடையாதீர்கள். உங்களுடைய உடலையும் தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியை நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். உடலை வளைக்காமல் நேராக உட்காரும்போது மூச்சுவிடுவது கொஞ்சம் எளிமையாக இருக்கும்.

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்போது முதலில் கவனம் செலுத்த வேண்டியது மூச்சுவிடுவதில் தான்.

மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். உள்ளே இழுக்கும்போது வேகமாக இழுத்து சிறிது நேரம் மூச்சை நிலைநிறுத்தி வைத்திருந்து பின் மெதுவாக வெளிவிடுங்கள்.

மன அழுத்தமும் பதட்டமும் நம்முடைய மார்பு மற்றும் முதுகுத் தசைகளை இறுக்கமடையச் செய்யும். இதனால் சுவாசிப்பது மிகவும் கடினமானதாக மாறும்.

அதுபோன்று உணரும்போது பதட்டப்படுவதோ அல்லது வேறு ஏதேனும் வேலையோ செய்வதை விடுத்து சிறிது நேரம் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். மனதையும் சுவாசத்தையும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆஸ்துமாவை தூண்டக்கூடிய மாசுக்கள், தூசி, அதிகப்படியான குளிர் அல்லது புகை உள்ள இடங்கள் (ஆஸ்துமாவை தூண்டும் சுற்றுக்சூழல்) ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள். அவை ஏற்கனவே உள்ள அஸ்துமாவை தூண்டி விடக்கூடும்.

ஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு லேசாக மூச்சுவிட சிரமமாக இருக்கிறது. ஆனால் கையில் இன்ஹேலர் எதுவும இல்லை என்றால் உடனே ஒரு கப் சூடான பானத்தைக் குடியுங்கள்.

அது வெந்நீராகவோ, டீ அல்லது காபியாகவோ, சூப் போன்றோ சூடான பானங்களைக் குடிக்கும்பாது சுவாசப் பாதை தளர்வாகி மூச்சுவிட எளிதாக இருக்கும்.

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு அவை கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் உதலியை நாடுவது முக்கியம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Asthma thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண