தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
ஐந்து கம்ப்யூட்டர் இலவசம் - வள்ளளுக்கு நேரில் நன்றி

ஐந்து கம்ப்யூட்டர் இலவசம் - வள்ளளுக்கு நேரில் நன்றி

Radheyan 22 Jun 2023 | 05:18 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமிக்கு ஐந்து கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கியவருக்கு நேரில் சந்தித்து நன்றி. இதன் விவரம் வருமாறு, 

இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமியில் முதல் கட்டமாக பதினோரு மாணவர்கள் குரூப் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் கட்டபொம்மன் பயிற்சி மைய மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐந்து கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கியுள்ளார் சங்கத்தின் பர்பிள் கிளப் உறுப்பினரும், கோவை மாவட்ட அதிமுக பிரமுகருமான திரு.சிவசாமி. இவரின் தயாள குணத்தை பாராட்டும் வகையில் சங்க நிர்வாகிகள் நேரில்  நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

கடந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பொன்னாடை அணிவித்து சிவசாமிக்கு நன்றி  தெரிவித்தார். அப்போது வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது சென்னை நலச்சங்கத்தின் சார்பிலும் சிவசாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Sivasamy Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண