தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக வை.மலைராஜன் நியமனம்!

கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக வை.மலைராஜன் நியமனம்!

Radheyan 08 Jul 2023 | 11:17 PM
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக தலைமையால் நியமிக்கப்பட்ட குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று விருப்ப மனுக்கள் செய்தவர்களிடம் நேர்காணல் செய்தது. இதன் மூலம் இறுதி செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் தலைமையின் ஒப்புதலுக்காக ஓரிரு மாதங்களாக காத்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர் வடக்கு கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளராக வை.மலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.


இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரைச் சந்தித்து வை.மலைராஜன் வாழ்த்துப்பெற்றார்.

திரு.மலைராஜன் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த அமைச்சர் பெருமக்களுக்கும், நியமன செய்த வாகை சந்திரசேகர் அவர்களுக்கும், ஒப்புதல் வழங்கிய திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vai.Malairajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண