தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
நாளை முதல் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

நாளை முதல் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

Radheyan 14 Jul 2023 | 04:15 PM
பகிர்:

பஞ்சுவிலை உயர்வு, இறக்குமதி வரி, மின் கட்டண உயர்வு போன்ற பல காரணங்களால் சிறு, குறு நூற்பாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

கடந்த சில மாதங்களாக விலைவாசி விண்ணியத்தாண்டி சென்றுகொண்டிருப்பதால் கடும் நெருக்கடியில் தத்தளித்து வரும் மக்கள் நூற்பாலைகள் போன்ற லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில்கள் முடங்குவதால் சமூகத்தில் எதிர்மறையான பல நிகழ்வுகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் நூற்பாலைகளை காப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் பின்வருமாறு,

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் ஜூலை 15ஆம் தேதி முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன.


பஞ்சு விலை உயர்வு காரணமாக நூற்பாலைகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதால் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல் மற்றும் மின் கட்டணம், ஜிஎ°டி போன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமலும் தத்தளிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 700  சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், 100 கோடி ரூபாய் வரையில் வருவாய்  இழப்பு ஏற்படும் என்று சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.

மேலும், சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

எனவே ஒன்றிய அரசு, பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கிக் கடன் வட்டி விகிதங்களை பழைய நிலைக்கு அதாவது 7.5 விழுக்காடு அளவுக்கு குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு முன் வைத்திருக்கிறது.

இதனைப் பரிசீலனை செய்து, நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’,
சென்னை - 8
14.07.2023 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vaiko thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண