பொம்பளை சீமானாக மாறிய நடிகை கஸ்தூரி! இந்து மக்கள் கட்சிக்கு ஏற்புடையதா?
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமென்றில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தெலுங்கர்களையும் திரைப்பட நடிகை கஸ்தூரி இழிவாகப்பேசியது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இதன்விவரம் வருமாறு,
தமிழகத்தில் பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய PCR சட்டம் போல் புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தியும், இந்து மக்கள் கட்சி ஏற்பாட்டில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நேற்று (03.11.2024) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிராமணர்களுக்கு ஆதரவாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட சமுதாயத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு தன்பேச்சைத் தொடங்கிய நடிகை கஸ்தூரி, திராவிட இயக்கங்களை குறிப்பாக திமுகவையும், பெரியாரிய அமைப்புகளையும் "திராவிடியா" (விபச்சாரி என்று பொருள்படும்படி) சகட்டுமேனிக்கு விலாசித்தள்ளினார். கஸ்தூரியின் சர்ச்சைக்குறிய பகுதி மட்டும் ,
பிராமணர்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராக இங்கு வந்துள்ள வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், நாடார், ஆதிகுடி சமூகத்தினர் மற்றும் என எண்ணிக்கை பெரும்பான்மையுள்ள தமிழ்ஜாதிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட கஸ்தூரி, கூட்ட ஏற்பாட்டாளர் அர்ஜுன் சம்பத் சார்ந்த சமூகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு ஹைதரபாத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், தற்போது அங்குதான் "ஜருகதண்டி" ( பிழைப்பு) நடப்பதாக தெலுங்கில் பேசினார்.
சங்க இலக்கிய காலத்திற்கு முன்பே ஆரியப்பண்பாடு தமிழகத்தில் நுழையும்போது, இங்கு தெய்வீக சேவைகளில் இருந்த சத்திரியரான வன்னியர், தேவர்களோடும், வைணவர், செட்டியார், முதலியார், வேளாளர், பண்டாரம் ஆகியோரோடும் ஐயங்கார்களும், சிவாச்சாரியார்களும் இணைந்து ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டதாக கூறிப்பிட்டார்.
மேலும், 4000 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர் போலன் கண்வாய் வழியாக வந்த வந்தேறியகளாக ஆரிய பிராமணர்களை "திராவிடியா" இயக்கத்தினர் விமர்சிப்பதாகக் குறைபட்டுக்கொண்ட கஸ்தூரி, 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின் அந்தப்புரத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் தங்களைத் தமிழ் இனம் என்று அழைத்துக்கொள்ளும்போது, பிராமணர்கள் மட்டும் தமிழர்கள் இல்லையா? என்றார்.
தவிர, ஆட்சி, அதிகாரத்தில் பங்குகேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டு, ஆதி தமிழ்குடி (பறையர்)களுக்கெல்லாம் ஆட்சி, அதிகாரத்தில் பங்கில்லை, தெலுங்கர்களுக்கு மட்டும் தான் ஆட்சி அதிகாரத்தில், அதுவும் 5 அமைச்சர்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.
கஸ்தூரியின் பேச்சை ஏதோ கூட்டத்தில் கிடைத்த கைதட்டலுக்காக உணர்ச்சிபொங்க பேசிவிட்டார் என்று பொத்தம் பொதுவாகக் கடந்துவிட முடியாது. கஸ்தூரியின் பேச்சு முழுக்க முழுக்க சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே பார்க்கமுடிகிறது. அவரது பேச்சில் வன்னியர், முக்குலத்தோர், நாடார், கவுண்டர், ஆதிகுடி (பள்ளர்-பறையர்) ஆகிய பெரும்பான்மை தமிழ்ச்சாதிகளை பிராமணர்களுக்கு ஆதரவான சாதிகளைப்போலக் காட்டிக்கொண்டு, தமிழ்மொழிபேசும் இதர சிறுபான்மை சாதிகளை கண்டுகொள்ளாததும் ஒரு நுண்ணரசியல்.
கலைஞர் கருணாநிதி குடும்பத்தை குறிவைப்பதற்காக ஒட்டுமொத்த தெலுங்கர்களையும் உண்மைக்கு மாறான கதையைச் சொல்லி திசைதிருப்பும் கஸ்தூரியின் பேச்சுக்காக, அவரது பாணியிலேயே தெலுங்கர்கள் பதிலடி கொடுக்க இறங்கினால், கஸ்தூரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவரது திரைப்பட வாழ்க்கை குறித்தும் எண்ணற்ற குப்பைகள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் கொட்டிக்கிடக்கிறது. அதேபோல், தனிப்பட்ட கஸ்தூரியின் பேச்சுக்காக ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்தை விமர்சிப்பதும் ஏற்புடையதல்ல. கஸ்தூரி பேச்சு தெலுங்கு பிராமணர்களையும் உள்ளடக்கியதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நடிகை கஸ்தூரின் பேச்சு முழுக்க பொம்பளை சீமானின் குரலாகத்தான் பார்க்க முடிகிறது. ஏற்கனவே கஸ்தூரியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தெலுங்கு சமூகத்தின் கேள்வி "கஸ்தூரியின் குரல்தான் இந்து மக்கள் கட்சியின் குரலா? கஸ்தூரியின் பேச்சை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறதா?" என்பதை கூட்ட ஏற்பாட்டாளர் என்ற வகையிலும், கஸ்தூரிக்கு மேடையில் பேச அனுமதியளித்தவர் என்ற வகையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தான் கஸ்தூரியின் பேச்சுக்கு விளக்கமளிக்க வேண்டும்.