🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தார் மாணவ-மாணவிகள் DNT-சான்றிதழ் பெறுவது எப்படி?

2021-22 ஆம் ஆண்டுக்கான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இச்சூழலில் நமது இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியர்கள் அனைவரும்  DNT சாதிச்சான்றிதழை பெறுவது மிக முக்கியம். DNT சான்றிதழ் பெறுவதற்கு இ-சேவை மையத்தில் விண்ணப்பிகுக்கும் பொழுது "தொட்டிய நாயக்கர்" என்று மட்டுமே சொல்லவேண்டும். இராஜகம்பளம், எர்ர கொல்லவார், வேக்கிலியவார் என்று சொன்னால் DNT சான்றிதழ் கிடைக்காது. ஆதலால் அனைவரும் ஒருமித்து "தொட்டிய நாயக்கர்" என்று மட்டுமே வாங்க வலியுறுத்தப்படுகிறது.

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி DNT சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

ஜாதி சான்றிதழ் வாங்க வைத்திருக்க வேண்டியவை. 

1.ஒன்று சாதிக்கான அத்தாட்சி அதுக்கு பழைய ஜாதி சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் அல்லது பத்திரங்கள் ஏதாவது ஒன்று.

2. குடும்ப அட்டை.

3.ஆதார் அட்டை. 

4. சான்று பெறுபவரின் புகைப்படம் ஒன்று. ஏதாவது ஒரு இ.செவை மையத்தில் இவற்றைக் கொடுத்து நாம் ஜாதி சான்றிதழ் பெற பதிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கான பதிவு எண் வரும் குறித்துவைத்துக்கொள்ளவும்.

15 நாட்களுக்குள்  சாதிச்சான்றிதழ் தயாராக உள்ளது என உங்கள் கைபேசிக்கு தகவல் வரும். 

கால தாமதம் ஆனால்  அதே  இ. சேவை மையத்திற்கு சென்று, உங்களது விண்ணப்பம் எந்த அலுவலரிடம் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். (VAO/ RI/ தாசில்தார் அலுவலகம்) இவர்களில் யாரிடம் உள்ளதோ, அவரிடம் சென்று விண்ணப்பத்தில் என்ன குறை/ சந்தேகம்  என அறிந்து உரிய விளக்கமளித்து  சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். 

வழங்க மறுத்தால் நுகர்வோர் கோர்ட்டில்வழக்கு தொடரலாம்.     

தொடர்புக்கு: திரு.எம்.பழனிசாமி. 9443172198.

உயர்மட்டக்குழு ஆலோசகர்,  சீர்மரபினர் நலச்சங்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved