தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
சென்னையில் கட்டபொம்மன் சிலை! அமைச்சர்-சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் வலியுறுத்தல்!

சென்னையில் கட்டபொம்மன் சிலை! அமைச்சர்-சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் வலியுறுத்தல்!

Radheyan 20 Jun 2021 | 04:44 PM
பகிர்:

கடந்த சட்டமன்றத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக தூத்துக்குடி மாவட்டத்தலைவர் வலசை கண்ணன் தலைமையிலான குழுவினர் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.P.கீதாஜீவன் அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருடனான சந்திப்பின்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளபடி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைப்பது குறித்தான அறிவிக்கையை முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலியே வெளியிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பின்பொழுது செயலாளர் இராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை புதூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் செய்திருந்தார்.


தகவல் உதவி: திரு.M.செல்வராஜ், புதூர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mrselvarajdmk thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண