தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மெல்ல சூடி பிடிக்கும் DNT போராட்டம்!- செவிமடுக்குமா தமிழக அரசு?

மெல்ல சூடி பிடிக்கும் DNT போராட்டம்!- செவிமடுக்குமா தமிழக அரசு?

Radheyan 07 Jul 2021 | 01:55 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்கள் ஒற்றை சாதிச்சான்றிதழ் கேட்டு பல வருடங்களாக போராடிவருகிறது. இந்நிலையில்,எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 116 சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட 20% இடஒதுக்கீட்டை, அதீத பதவி ஆசையால், அரசியல் காரணங்களுக்காக, 115 சாதிகளை கலந்தாலோசிக்காமல், அரசின் ஆயுட்காலத்தின் இறுதி நொடிகளில்  ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கியது, 115 சாதிகளைச்சேர்ந்த லட்சக்கணக்கான மாணவச் செல்வங்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியுற்ற DNT சமுதாயத்தினர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசை வீழ்த்த சபதமேற்று நிறைவேற்றிக்காட்டினர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த நொடிமுதல் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முழுகவனத்தை செலுத்தி வெற்றிகண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. புதிய கல்வியாண்டு தொடங்குவதால் பத்திரிக்கையாளர் ஒருவர் வன்னியர் உள்இடஒதுக்கீடு சம்மந்தமாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து குறித்த சிக்கலை வெளிப்படுத்தியிருந்தார். இதனையொட்டி உடனடியாக பா.ம.க.நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசை நிர்ப்பந்தித்தார். இதன்தொடர்ச்சியாக வன்னியர் உள்ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தக்கோரி பா.ம.கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். 

ஒருபுறம் வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தச்சொல்லி பாமக-வினர் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து வருகையில், 115 சமுதாய மக்களின் நியாயத்தை அரசிடம் எடுத்துச்சொல்ல எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இல்லாத நிலையில், தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து தங்கள் வேண்டுகோளை, நியாயத்தை முதல்வரிடம் எடுத்துச்சொல்ல நேரம் ஒதுக்கக்கோரி 115 சமுதாய தலைவர்களும் அரசிடம் முறையிட்டிருந்தனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த சாதகமான பதிலும் வராதநிலையில் 115 சமுதாயத்தினரும் ஆங்காங்கே சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தையும் துவங்கியுள்ளனர். தேனி, நாமக்கல், மதுரை போன்ற இடங்களில் தொடங்கியுள்ள இப்போராட்டம் மேலும் வலுப்பெற்று அரசின் மீது நம்பிக்கை இழக்கும் முன் தமிழக அரசு 115 சமுதாய அமைப்புகளை அழைத்து பேசவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண