🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விஸ்வரூபம் எடுக்கும் இடஒதுக்கீடு விவகாரம்! புதிய வடிவில் நூதன போராட்டம்!

கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேல பிறந்தநாளான ஜூலை'18-ஐ இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்,பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் நெல்சன் மண்டேலா பாடுபட்டார் என்றும், ஆகையால் அவரது பிறந்தநாளை சர்வதேச மண்டேலா தினமாக கொண்டாட ஐ.நா. தீர்மானித்தது. 

சட்டப்படியோ, தர்மப்படியோ எந்தவித ஆதாரமும் இல்லாமல், பதவி ஆசைக்காக வன்னியருக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கி, 115 சமூக மக்களின் உரிமைகளை அழித்து கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிபோவதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி.திரு.கே.பழனிச்சாமி அவர்களின் புகைப்படத்தை எரித்து தங்கள் உரிமைக்குரலை வெளிப்படுத்துவதென சமூகநீதிக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதனையொட்டி வரும் 18-ஆம் தேதி 115 சமுதாய மக்கள் அவரவர் இல்லங்கள் முன் முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை எரித்து, இடஒதுக்கீடு உரிமை முழக்கமிடப்போவதாக அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved