🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் என்று ஒரு இனமுண்டு! - அரசுக்கு உணர்த்த வழியுண்டு! - உங்களுக்கு நீங்களே தலைவர்!

116 சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு இடஒதுக்கீட்டு  உரிமையில்,  ஒரு சாதியினர் கேட்டார்கள், போராடினார்கள் என்று அந்த இடஒதுக்கீட்டிற்கு பாத்தியப்பட்ட, உரிமையுள்ள 115 சாதிகளை கேட்காமல், வாக்கு வங்கி அரசியலுக்காக ஒருசாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிவிட்டார்கள்.இது எப்படி உள்ளது என்றால் 116 பேர் சாப்பிட்டுவரும் உணவை, ஒருவன் அழுகிறான், அடம்பிடிக்கிறான் என்று அந்த ஒருத்தனுக்கு மட்டும் பாதி உணவை அளித்துவிட்டு, மற்றவர்களிடம் சாப்பாடு சரியா இருக்குமா என்று கூட கேட்காததைத் தான் நாம் அவற்றை இது வழிப்பறி, கொள்ளை என்கிறோம். 

வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்டது மட்டுமல்ல நீதிமன்றத்தில் புகார் கொடுத்தால், நாங்கள் கொள்ளையடிக்கும்பொழுது யாரும் எதிர்க்கவில்லை, அவர்களிடமிருந்து இதைத்திருடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். அப்படியானால் நமக்கும் வயிறு உள்ளது, பசிக்கிறது என்று அரசுகளுக்கும் நீதிமன்றத்திற்கும் உணர்த்தவேண்டியுள்ளது. 

தொட்டியநாயக்கர் என்ற இனமுண்டு, எங்களுக்கும் குடும்பம்,  குழந்தைகள் உண்டு.நாங்களும் அரசு குடிமக்களுக்கு விதிக்கும் அனைத்து வரிகளையும் கொடுக்கிறோம். எனவே எங்கள் குழந்தைகளும் படிக்கவேண்டும், அரசின் சலுகைகள் வேண்டும், அரசு வேலைவாய்ப்புகளில் இடம் வேண்டும் என்று நமது குரலை அரசுக்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.  


இதை யாரும் சென்னைக்கு சென்று முதல்வரை சந்தித்து சொல்லத் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே ஒரு வெள்ளைக்காகிதத்தில் பறிக்காதே! பறிக்காதே! எங்கள் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே! திருடாதே திருடாதே எங்கள் சாதியின் உரிமைகளை திருடாதே! ஆக்காதே ஆக்காதே எங்கள் குழந்தைகளை அடிமைகள் ஆக்காதே! என்று எழுதி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமோ அல்லது உறவினர்கள், நண்பர்களிடங்களில் கையெழுத்து பெற்று 7395988767 என்ற எண்ணிற்கு எங்களுக்கு  வாட்ஸ் அப் பில் அனுப்பிவைக்கவும்.

இதை ஒரு சமூகசேவையாக செய்ய நினைப்பர்கள் உறவினர்,பொதுமக்கள், பாதிக்கப்பட்ட சமுதாய மக்களிடம் கையேழுத்து பெற்று உங்கள் புகைப்படத்துடன் 7395988767-என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும் www.thottianaicker.com இணையதளத்தில் செய்தி வெளியாகும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved