🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தேசிய அளவிலான தேர்வில் வெற்றிபெற்று வழிகாட்டும் இளந்தளிர் பூர்ணா!

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினர் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக மத்திய கல்வித்துறை சார்பில் சார்பில் தேசிய அளவில் நடத்தப்படும் National Means-cum-Merit Scholarship (NMMS) தேர்வில் வெற்றிபெற்றுள்ள செல்வி எஸ்.பூர்ணா-வுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு, 

விருதுநகர் மாவட்டம், பாலவனத்தம் வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரு. கி.செந்தில் - திருமதி. ரூபிணி தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் S. பூர்ணா ஸ்ரீ. இவர் பாலவநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெயின்டிங் தொழிலாளியான இவரது தகப்பனார் செந்தில் தினக்கூலி அடிப்படையில் வேலைசெய்து வருகிறார். படிப்பில் சிறந்து விளங்கும் செல்வி. பூர்ணா வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வகுப்பாசிரியர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவராக இருந்துவருகிறார். பூர்ணா-வின் திறைமைக் கண்ட ஆசிரியர்கள் குடும்பசூழல் காரணமாக 'இடைநிற்றல்' ஆகிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தனர். எனவே பூர்ணா வை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையைப் பெற்றுத்தர முடிவு செய்தனர். 

அதனடிப்படையில், 8 ஆம் வகுப்புக்குப்பிறகு 12 ஆம் வகுப்புவரை நான்காண்டுகாலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு மத்திய அரசு மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.1000/- கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேசிய அளவில் நடைபெறும் National Means-cum-Merit Scholarship (NMMS) தேர்வு எழுத ஊக்குவித்தனர். தினக்கூலி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடும், மிகுந்த தன் நம்பிக்கையோடும் NMMS தேர்வை எதிர்கொண்ட மாணவி பூர்ணா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை பெரும் பூர்ணா, குடும்ப பொருளாதார சூழல் காரண்மாக இடைநிற்றல் பயமின்றி தன் கல்வியைத் தொடர்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது. மேலும், தனது மேற்படிப்பை சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்பையும், பட்டப்படிப்பை என்ஐடி, ஐஐடி போன்ற தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்புகளையும் பிரகாசமாக்கியுள்ளார். தேசியத் தகுதிதேர்வில் வெற்றிபெற்றுள்ள இளந்தளிர் பூர்ணாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், கிராமப் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

NMMS தேர்வு குறித்து கூடுதல் தகவல்கள்:

1. நோக்கம்:

8-ஆம் வகுப்பு பிறகு மாணவர்கள் படிப்பை நிறுத்தாமல் தொடர ஊக்குவிக்க.

பொருளாதார ரீதியாக பலவீனமான திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க.

2. உதவித்தொகை தொகை:

ஆண்டுக்கு ₹12,000 (ஒரு மாதம் ₹1,000)

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

3. யார் எழுதலாம்?

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

அரசு / அரசு உதவி பள்ளிகளில் படிக்க வேண்டும்.

7ஆம் வகுப்பில் குறைந்தது 55% மதிப்பெண் (SC/STக்கு 50%)

பெற்றோர் ஆண்டு வருமானம் பொதுவாக ₹3.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

4. தேர்வு முறை:

NMMS தேர்வு இரண்டு பகுதிகள்:

a). MAT – Mental Ability Test

b). SAT – Scholastic Aptitude Test (Maths, Science, Social Science)

5. தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்

ஒவ்வொரு தேர்விலும் 40% (SC/STக்கு சலுகை).

6. மொத்தScholarship

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் 1,00,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved