ஊராட்சி மன்றத் தலைவர் விளாத்திக்குளம் - திருமதி.N.நாகராணி மூவேந்திரன். B.Sc.,B.Ed.

திருமதி.N.நாகராணி B.Sc., B.Ed., அவர்கள் 16.03.1991- இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள தவசிலிங்கபுரம் கிராமத்தில் திரு.நாகராஜ் - திருமதி.இந்திரா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். திரு.R.மூவேந்திரன் அவர்களை மணமுடித்துள்ளார். திரு.மூவேந்திரன் அவர்கள் சென்னையிலுள்ள பெருநிருவனங்களில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.
திருமதி.
நாகராணி அவர்களின் தந்தையார் திரு.N.நாகராஜ் அவர்கள் 10.10.1964
-இல் தூத்துக்குடி மாவட்டம்,
விளத்திக்குளம் அருகேயுள்ள தவசிலிங்கபுரம் கிராமத்தில் திரு. நாகப்ப நாயக்கர் - திருமதி.
ஐயராம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி
வரை பயின்றவரான திரு.நாகராஜ் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.N.இந்திரா என்ற மனைவியும், N.நாகராணி
மற்றும் N.நவஸ்ரீ என்ற இருமகள்களும் உள்ளனர்.
திரு.நாகராஜ் அவர்களின் தந்தையார் அவர்கள் அ.தி.மு.கழகத்தில் கிளைக் கழகச் செயலாளராக பணியாற்றியவர் என்பதால் தொடக்க காலத்திலிருந்தே தீவிர அதிமுக தொண்டரான வளர்ந்தவர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.கழகத்தில் தொடர்ந்து பயணித்து வரும் திரு. நாகராஜ் அவர்கள் கட்சிப்பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். ஆளும்கட்சியின் மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருபவர். உள்ளூர் மக்களின் சுக-துக்கங்கள் அனைத்திலும் பங்கெடுத்துப்பதுடன், முதியவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் திரு. நாகராஜ் அவர்கள்.
கடந்த
2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது மகள் திருமதி. நாகராணி அவர்களை
மணியகாரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள்
மனதில் இடம் பெற்றுள்ளார் திரு.நாகராஜ் அவர்கள்.பட்டதாரியான
தன் மகள் திருமதி. நாகராணியை ஊராட்சி தலைவராக்கியதின் மூலம், மணியகாரம்பட்டி ஊராட்சியை
தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக மாற்றிடும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும்,
சிறந்த நிர்வாகத்தையும் வழங்குவதுடன் சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி அனைத்து
தரப்பு மக்களுக்கும் பணியாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை
சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.