இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் நன்கொடையாளர் இல்ல திருமணவிழா!
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்ப்பிள் கிளப் உறுப்பினரும், நன்கொடையாளருமான தொழிலதிபர் எஸ்.தனபால் இல்ல திருமணவிழா ஞாயிற்றுக்கிழமை (08.09.2024) காலை நடைபெறவுள்ளதை அடுத்து சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
கோவை மாவட்டம், குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவரும் பாரத் பில்டர்ஸ் உரிமையாளருமான Rtn.Er.S.தனபால் - D.சிவகாமி தம்பதியினரின் அன்பு மகன் Er.D.நிகில் நிதேஷ் B.E.,கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் திரு.K.கண்ணப்பன் - திருமதி B.ராஜேஷ்வரி ஆகியோரின் அன்பு மகள் Dr.K.ஐஸ்வர்யம் MBBS ஆகியோரது திருமண விழா கோவை, மதுக்கரை மரப்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி பாலாஜி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.09.2024) காலை 7.00 மணிக்குமேல் 8.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை (07.09.2024) மாலை 6.00 மணி முதல் 9.30 மணிவரை மேற்படி மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து உருமால்கட்டு சீரும் நடைபெறவுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள்கிளப் உறுப்பினரும், நங்கொடையாளருமான தொழிலதிபர் எஸ்.தனபால் இல்லத்திருமணவிழாவில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகரும், ஈச்சனாரி ஊர்நாயக்கருமான Rtn.C.முத்துச்சாமி, அரசியல் கட்சி பிரமுகர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், சிவசாமி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப்பிரதிநிதிகள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊர்நாயக்கர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.