தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
மறைந்தார் மாமனிதர் செக்கன்னம் ஊர் நாயக்கர் K.குப்பமுத்து நாயக்கர் - விடுதலைக்களத்தின் வீரவணக்கம்.

மறைந்தார் மாமனிதர் செக்கன்னம் ஊர் நாயக்கர் K.குப்பமுத்து நாயக்கர் - விடுதலைக்களத்தின் வீரவணக்கம்.

Admin 11 Aug 2020 | 03:54 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், செக்கன்னம் ஊர் நாயக்கரும், வையம்பட்டி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின்  மாநில துணைத்தலைவருமான திரு.K. குப்பமுத்து நாயக்கர் அவர்கள் இன்று (10.08.2020) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சிறந்த பண்பாளர், சமுதாய பற்றாளர், புகழ்பெற்ற  வீரப்பூர் கோவிலின் முக்கிய காரியதரிசியாக திகழ்ந்தவர் திரு.குப்பமுத்து நாயக்கர் அவர்கள்.


விடுதலைக்களம் அமைப்பை துவங்கிய ஆரம்பநிலையில் மரியாதைக்குரிய கடவூர் ஜமீன்தாரிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பேருள்ளம் பெற்றவர். அவர் ஊரின் மாலை தாண்டுதல் நிகழ்வுக்கு இந்த எளியவனை சிறப்பு அழைப்பாராக அழைத்து சிறப்பு செய்தவர் பெருந்தனக்காரர். அன்னாரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் கண்ணியம் காத்திட்ட பெருமகனார். சமுதாயத்திற்கு கிடைத்திட்ட அரிய பொக்கிஷம். விடுதலைக்களம் சார்பில் நிகழ்ச்சிக்கு அழைத்தபோதெல்லாம் வந்திருந்து கொடியேற்றி சிறப்பித்த மாமனிதர்.

வார்த்தைகளில் அடக்கமுடியாத பண்புநலன்களுக்கு சொந்தக்காரர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொனா துயர்கொண்டேன். அவரது மறைவு குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரின் ஆன்மா இறைவன் மடியில் துயில்கொள்ள விடுதலைக்களத்தின் சார்பில் பிராத்திக்கின்றோம்.


இவண்,                                                                                                                                                                                                                                                                                                                                                கொ .நாகராஜன் 

நிறுவன தலைவர், விடுதலைக்களம்

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Sekkanam-K.Kuppamuthu Nayakkar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண