🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகரமன்ற துணைத்தலைவராக கே.ஏ.எம்.குணா தேர்வு! - வாழ்த்துகள்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று (02.03.3022) பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப்பிரமாணமும் எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாநகர மேயர்,துணைமேயர், நகரமன்றத் தலைவர்,துணைத்தலைவர், பேரூராட்சித்தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் நாளை (04.03.2022) நடைபெறவுள்ளது. இப்பதவிகளுக்கு கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இடங்களை ஆளும் கட்சியான திமுக இன்று அறிவித்துள்ளது. கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி திமுக கூட்டணியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி துணைத்தலைவர் பதவி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதிமுக சார்பில் மாவட்ட முன்னாள் செயலாளரும்,  அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருமான K.A.M.குணா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திரு.குணா அவர்கள் பரமக்குடி நகராட்சி 33-வது வார்டில் போட்டியிட்டு நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதிமுக-வின் தொடக்கால உறுப்பினரான K.A.M.குணா அவர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். நகரமன்ற துணைத்தலைவர் வாய்ப்பு வழங்கியுள்ள மதிமுக-விற்கும், பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் கம்பளத்தாரின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். திரு.K.A.M.குணா-வைபற்றி முழு விபரம் அறிய நீலநிறத்திலுள்ள திரு.K.A.M.குணா க்ளிக் செய்யவும். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved