தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஒன்றியச் செயலாளராக A.முனியசாமி நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்!

ஒன்றியச் செயலாளராக A.முனியசாமி நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்!

Radheyan 02 Jul 2022 | 02:13 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஓராண்டை நெருங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பாஜகவிலுள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எல்லா தரப்பு மக்களுக்கும் அரசியல் வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக மீனவர் அணி, ஓபிசி அணி, விவசாய அணி, சிறுபான்மையினர் அணி, விருந்தோம்பல் அணி, அறிவுசார் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வர்த்தக அணி என எண்ணற்ற அமைப்புகளை உருவாக்கி வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரும் பாஜகவில் இணைந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.  கடந்த 11-ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளாக இரு துணைத்தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஐந்து செயலாளர்கள் மற்றும் ஒரு பொருளாளரை நியமித்து ஒன்றியத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரம் தெற்கு ஒன்றியச்செயலாளராக  திரு.A.முனியசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றியச்செயலாளராக திரு.முனியசாமி அவர்களை நியமனம் செய்ய பரிந்துரை மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Muniasamy thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண