தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
இந்து சமய அறநிலையத்துறை மாவட்டக்குழுத் தலைவராக நியமனம்!

இந்து சமய அறநிலையத்துறை மாவட்டக்குழுத் தலைவராக நியமனம்!

Radheyan 22 Sep 2022 | 04:55 PM
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம் இந்துசமய அறநிலையத்துறையின் மாவட்டக்குழு தலைவராக மேலமுடிமன்னார்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திகைச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலமுடிமன்னார்கோட்டை ஊராட்சிமன்றத்தலைவரின் மகனான கார்த்திகைச்சாமி அறிவுசார் தளத்திலும், கள அரசியலும் சேர்ந்து இயங்கக்கூடிய கம்பளத்தார் சமுதாயத்தில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவர்.

அரசியலுக்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு தலைவர்களை வழங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தில், கமுதி வட்டாரத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கம்பளத்தார் சமுதாயத்தினர் இருந்தும் சமீப காலங்களில் குறிப்பிடும்படியான அரசியல் ஆளுமைகளின்றி சமுதாயம் தவித்து வந்தது. இந்நிலையில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் கம்பளத்தாருக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தை அம்மாவட்ட அமைச்சர் மாண்புமிகு. இராஜகண்ணப்பன் அவர்கள் வழங்கியிருப்பது மகிழ்சிக்குறியது. இதன் மூலம் திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக-வில் வாய்ப்பற்ற சமூகங்களுக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்ற நீண்டகால குற்றச்சாட்டுக்கு, பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சர் பெருமகனார் சமூகநீதிக்கான தனது பங்களிப்பை செய்துள்ளார்.

மதிப்புமிக்க இப்பதவிக்கு கார்த்திகைச்சாமி அவர்களை பரிந்துரை செய்த அமைச்சர் மாண்புமிகு. இராஜகண்ணப்பன் மற்றும் நியமனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு.சேகர்பாபு ஆகியோருக்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Karthikaisamy Thottianicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண