தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
புதூர் ஒன்றியத்தில் சூடுபிடித்த முப்பெரும்விழா பணிகள்!

புதூர் ஒன்றியத்தில் சூடுபிடித்த முப்பெரும்விழா பணிகள்!

Radheyan 23 Dec 2022 | 05:14 PM
பகிர்:

புதூர் ஒன்றியத்தில் சூடுபிடித்த முப்பெரும்விழா பணிகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைநகர் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படவுள்ள முப்பெரும் விழா பணிகள் மாநிலம் முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் அச்சிடப்பட்ட 2023-ஆம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு சங்கத்தின் நன்கொடையாளர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.


இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட தினசரி காலண்டர் விநியோகிக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார் புதூர் ஒன்றிய மு.பெருந்தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினரும், புதூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான திரு.தனஞ்செயன் அவர்கள்.


இதனையடுத்து நத்தத்துப்பட்டி மோகன் உள்ளிட்ட உறவுகள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை சந்தித்து முப்பெரும் விழாவிற்கு வரவேண்டி நேரில் சந்தித்து அழைப்பும், தினசரி காலண்டரும் வழங்கி வருகின்றனர்.

ஏற்கனவே, முப்பெரும் விழாவிற்கான  முதற்கட்ட பங்களிப்பாக ரூ.20000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் நிதி திரட்டும் பணியை ஏற்கனவே திரு.தனஞ்செயன் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Dhananjeyan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண