🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 12-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா!

வீரசக்கதேவி ஆலய 12-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா!

பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள அருள்மிகு வீரசக்கதேவி ஆலய 12-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (11.02.2023, சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக ஆலயக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலயக்குழு பொதுச்செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்தியில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வான அருள்மிகு வீரசக்கதேவி ஆலாய 12-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை (11.02.2023) அன்று காலை 10.30 க்குமேல் 11.30 மணிக்குள் நடைபெறவுள்ளதாகும், அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், அன்னதான நிகழ்ச்சிக்குப்பின் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத்திருவிழா வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு (2023) சித்திரை மாதம் நடைபெறவுள்ள சித்திரைத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பக்தகோடிகள் நாளை நடைபெறும் 12-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கலந்துகொண்டு அன்னையின் அருள்பெறுமாறு வேண்டுகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved