தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
உலகில் முதன்முதலாக கட்டப்பட்ட அணை தெரியுமா?

உலகில் முதன்முதலாக கட்டப்பட்ட அணை தெரியுமா?

Radheyan 31 Mar 2023 | 04:36 PM
பகிர்:

உலகின் முதன்முதாலக கட்டப்பட்ட அணை ஜோர்தான் நாட்டிலுள்ள ஜாவா அணை. இந்த அணை ஜோர்தான் தலைநகர் அம்மானின் வடகிழக்குத் திசையில் 100 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் செயல்படும் ஒரு அணையாக அறியப்பட்டது. 

ஜாவா அணை கிமு 3000 ஆண்டுகளுக்கு (இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முந்தையது) முந்தையதாக அறியப்படுகிறது. இந்த அணை தற்போது உபயோகத்தில் இல்லை. வரலாற்றுச் சின்னமாகக் கற்குவியலாகக் காட்சியளிக்கிறது. 

இதற்கு அடுத்து எகிப்து நாட்டில் கெய்ரோவின் தெற்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடி அல்-கராவில் கிமு 2600 இல் கட்டப்பட்ட சட்-எல்-கப்பா அணை. தற்போது இடிபாடுகளோடு வரலாற்றுச் சின்னமாக உள்ளது. ஏமன் நாட்டில் கிரேட் டாம் ஆஃப் மெரிட் எனும் அணை கிமு 1700-இல் (3700 வருடங்கள் முந்தையது) கட்டப்பட்டு, தற்போது இடிபாடுகளோடு காட்சியளிக்கிறது.

இவ்வரிசையில் கரிகாலன் கட்டிய கல்லணையின் வயது 2100 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Java dam thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண