🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவிட்-19, விடையை சொல்லுங்க-பரிசை அள்ளுங்க” இறுதி சுற்று கேள்விகள்

#வீரசக்கதேவி_துணை:-

==========================

#பாஞ்சாலங்குறிச்சி_வீரசக்கதேவி_ஆலயக்கமிட்டியினர்_நடத்திய_வரலாற்று_கேள்விகளுக்கான_இரண்டாம் சுற்றில் #பலரும்_பதில்_அனுப்பியுள்ளனர்_அதில்_வெற்றிபெற்ற_நபர்_ஓரிருநாளில்_அறிவிக்கப்படுவர்.

#மூன்றாவது_சுற்று_இன்றுமுதல்_ஆரம்பமாகிறது.

கோவிட்19க்காக விடுமுறையில் இருக்கும் நம் சொந்தங்கள் வரலாற்றை அறிந்தகொள்வதற்காக “பாஞ்சை சக்கதேவி ஆலய கமிட்டி” போட்டி ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில், மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

முதற்கட்டமாக தகுதிச்சுற்றில் 33கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இரண்டாம் சுற்றில் 33 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இறுதிசுற்று 34 கேள்விகள். மதிப்பெண் தலா-3 மார்க்.

பரிசு விபரம்.

முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.2000.00,

இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.3000.00

இறுதி சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 5000.00

இதுதவிர, போட்டியில் பங்குபெறும் 40 நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டுநாள் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு இலவசமாக அழைத்துச்செல்லப்படுவர். தங்குமிடம்-உணவு இலவசமாக வழங்கப்படும். இரண்டாம்நாள் வரலாற்று கருத்தரங்கம் நடைபெறும்.

நடைபெறும் நாள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சித்திரை விழாவின்பொழுது தெரிவிக்கப்படும்.

பரிசு வழங்குமிடம் இடம்-நாள்: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவிகோவிலில் சித்திரை திருவிழா மேடை. 08.05.2020.

கோவில்கமிட்டியின் முடிவே இறுதியானது

################################

மூன்றாம் சுற்றுக்கான கேள்விகள் பின்வருமாறு:−

1, ஆதிகாலத்தில் மக்கள் வாழ்ந்த கண்டம் என்ன?, உலோகயுகத்தில் நம்மக்கள் வாழ்ந்த இடம் எது? உலகின் முதல் போர் ஒப்பந்தத்தை பதிவு செய்த பேரரசு எது?

2, உலகின் முதல் ஒப்பந்ததில் தோக்கிலவா யாருடைய சகோதரர் என குறிப்பிடப்படுகிறது?, தோக்கிலவா மடலில் இடம் பெற்றுள்ள ஒருவர் பெயர் இன்றளவும் நம் மனதில் நிற்கிறது, அப்பெயர் என்ன?

3, மத்திய ஆசியாவிலிருந்து நம்முடன் பலரும் வந்தனர், அதில் நம்முடைய சகோதர இனமாக இன்றளவும் இருக்கிறவர்கள் யார்?

4, சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வாறு தென்னகம் வந்தார்கள் என கனகசபை குறிப்பிடுவதாக, திருநெல்வேலி கெஷட்டிரியரில் ஒரு கருத்து உள்ளது. அதன் பக்கம் என்ன?

5, , திருநெல்வேலி கெஷட்டியரில் 1755ல் நடைபெற்ற ஹெரான் படையெடுப்பு பற்றிய குறிப்பு எந்த பக்கத்தில் உள்ளது?

6, திருநெல்வேலி கெஷட்டியரில் 1783ல் நடைபெற்ற புல்லர்ட்டான் படையெடுப்பு பற்றிய குறிப்பு எந்த பக்கதில் உள்ளது?

7, திருநெல்வெலி கெஷட்டியரில் காடல்குடி பாளையம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

8, திருநெல்வேலி கெஷட்டியரில் குளத்தூர் பாளையம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

9, திருநெல்வெலி கெஷட்டியரில் பானர்மேன் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

10, திருநெல்வேலி கெஷட்டியரில் ஊமைதுரை பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

11, திருநெல்வேலி கெஷட்டியரில் எட்டயபுரம் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

12, திருநெல்வேலி கெஷட்டியரில் கம்மவார் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

13, திருநெல்வேலி கெஷட்டியரில் லெப்டினன்ட் கிளார்க் பற்றிய குறிப்புகள் எந்தெந்த பக்கங்களில் உள்ளது?

14, நெல்சனின் மதுரை மேனுவலில் வடுகன் என்று யார் யாரை குறிப்பிடுகிறார்?

15, நெல்சனின் மதுரை மேனுவலில் கம்பளத்தாரின் சேவல் சண்டை மற்றும் வேட்டையாடுதல் ஆர்வம், அவர்களின் தார்மீகத்தை குறைத்ததாக எந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?

16, நெல்சனின் மதுரை மேனுவலில் வடுகர்யெனப்படுபவர்களின் சாரசரி உயரம் மற்றும் சுற்றளவு பற்றி டாக்டர் ஜோசப் சொல்வதை எந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?

17, நெல்சனின் மதுரை மேனுவலில் திருமலை நாயக்கர் பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்திலிருந்து எந்தபக்கம் வரை உள்ளது?

18, நெல்சனின் மதுரை மேனுவலில் திருமலை நாயக்கரை எதிர்த்த எட்டயபுர பாளையக்காரரை கொன்றது பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?

19, நெல்சனின் மதுரை மேனுவலில் மைசுரை எதிர்த்து திருமலை நாயக்கர் நடத்திய மூக்கறுப்பு போர் பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?

20, நெல்சனின் மதுரை மேனுவலில் சந்தாசாகிப், ராணி மீனாட்சியை நம்பவைத்து மதுரையை கைப்பற்றியது பற்றிய குறிப்புகள் எந்தபக்கத்தில் உள்ளது?

21, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் நீள, அகலம் எவ்வளவென்று குறிப்பிடுகிறார்?

22, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் சங்கரங்கோவிலிலிருந்து கிளம்பிய வெள்ளையர் படை குலசேகரநல்லூரை என்று வந்தடைந்ததாக குறிப்பிடுகிறார்? பாஞ்சை படையில் எத்தனை வீரர்கள் வந்ததாக குறிப்பிடுகிறார்?

23, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் காடல்குடிப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்னவென்று குறிப்பிடுகிறார்?

24, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் மற்ற எல்லாப் பாளையக்களிலும் உறுதியும், அஞ்சா நெஞ்சமும் வாய்ந்தவர் என்று எந்தப் பக்கத்தில் குறிப்பிடுகிறார்?

25, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் ஊமைதுரையை எதிர்த்து வெள்ளையருக்கு எட்டயபுர பாளையக்காரர் செய்த உதவியை எந்தெந்த பக்கத்தில் குறிப்பிடுகிறார்?

26, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி வரைபடத்தை எந்தெந்த பக்கத்திற்க்கு இடையில் குறிப்பிடுகிறார்?

27, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி போரில் லெப்டினன்ட் கில்கிரிஷ்ட் எப்பொது கொல்லப்பட்டதாக குறிப்பிடுகிறார்?

28, ஜெனரல் வெல்ஸின் ராணுவ நினைவுகள் எனும் புத்தகத்தில் ஊமைதுரையின் தன்னலம் கருதாத தூய்மையான தேசபக்தியென்று எந்தபக்கத்தில் குறிப்பிடுகிறார்?,

29, கட்டபொம்மனாருக்கு புகழாரம் சூட்டிய கேரள முதல்வர் யார்?

30, கட்டபொம்மனை தூக்கிலிட்ட பானர்மேன் எவ்வாறு இறந்தான்? அவனது கல்லறை எந்த நாட்டில், எந்த சர்ச்சில் உள்ளது?

31, இந்திய வரலாற்றில் முதன்முதலில் நான்கு வெள்ளையரை தூக்கிலிட்டவர் யார்?

32, இங்கிலாந்து இளவரசர் எட்வர்டுக்கு, சிவகங்கை ராணி பரிசளித்த சுருள்வாள் யாருடையது? எந்த நாட்டில், எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?

33, பானர்மேனுக்கு உயர் அதிகாரியாகயிருந்து பாஞ்சாலங்குறிச்சி போரை வழிநடத்திய ஆதர்வெல்லெஸ்லி பிற்காலத்தில் இங்கிலாந்தில் வகித்த உயர்பதவி என்ன? அவர் போரிட்டு வென்றவர்களில் முக்கியமானவர்கள் யார்? பாஞ்சாலங்குறிச்சி போரை பற்றி அவரது கடிதப் போக்குவரத்தை விளக்கவும்…

34, கட்டபொம்மனாரின் வரலாறு படித்து, இரட்டைவாள் போன்று இரட்டை துப்பாக்கியை தனது இயக்க கொடியாக அமைத்த போராளி யார்? வெல்ஸ்ன் புத்தகத்தை விரும்பிப் படித்த போராளி யார்?

குறிப்பு:−

மூன்றாம் சுற்றிற்கான பதில் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21−04−2020.

அனைவரும் கலந்து கொள்ளலாம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்: 7010014851

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved