🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக தாமரைச்செல்வம் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி இணையதள பொறுப்பாளராக மதுரை V.தாமரைச்செல்வம் B.Sc., நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழக அரசியலில் கால்நூற்றாண்டுகளாக தோல்விகளையே சந்தித்து வந்த இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றக்கொண்ட பின் அக்கட்சியினருக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த நிதானமாகவும், மதிநுட்பத்தோடும், தெளிவான பேச்சாலும் மிகக்குறுகிய காலத்தில் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள துரைவைகோ, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார்.

இந்நிலையில் 30 வது ஆண்டை கடந்துள்ள மதிமுகவில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல்கள் நடைபெற்று முடிந்து ஐந்தாவது அமைப்புத்தேர்தலில் தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர். இதனொரு பகுதியாக சட்டமன்றத் தொகுதி வாரியாக இணையதள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி இணையதள அணி பொறுப்பாளராக V.தாமரைச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், திம்மநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கலை கணித பட்டதாரியான தாமரைச்செல்வன், மதிமுக வில் நீண்டநாட்களாக பயணித்து வருபவர். தற்போது மதுரையில் வசித்துவரும் தாமரைச்செல்வன் மதிமுக நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பவர், டெல்லியில் அக்கட்சி சார்பில் நடத்திய போராட்டத்திலும் கலந்துகொண்டு கட்சியின் முன்னனி தலைவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். மேலும் அக்கட்சியின் வலிமைவாய்ந்த அமைப்பான தொண்டரணியிலும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

மதுரை வடக்கு மாவட்ட இணையதள அணியின் பொறுப்பாளராக V.தாமரைச்செல்வம் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துவதோடு, தாமரைச்செல்வனை இப்பதவியில் நியமித்த கழக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்கவுள்ள துரைவைகோ மற்றும் பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னனி கழக நிர்வாகிகளுக்கு இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved