தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை!
விளம்பரங்கள்
மத்திய அரசுப்பணிகளெல்லாம் உயர்சாதிகளுக்கே அர்ப்பணம் - வெளியான அதிர்ச்சி தகவல்

மத்திய அரசுப்பணிகளெல்லாம் உயர்சாதிகளுக்கே அர்ப்பணம் - வெளியான அதிர்ச்சி தகவல்

Radheyan 02 Aug 2023 | 01:05 AM
பகிர்:

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பிரிவுகளின் பிரதிநிதித்துவம் குறித்து ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார் சிங்காரி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்துள்ள பதிலில் 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் 5 துணைவேந்தர்கள் மட்டுமே ஓபிசிக்கள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

45 மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களில் 4% பேரும், இணைப் பேராசிரியர்களில் 6% பேரும் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் மக்களவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் இராமதாஸ்,பட்டியலினத்தவருக்கான பிரதிநிதித்துவமும் 10 சதவீதத்தை தாண்டவில்லை; பழங்குடியினர் பிரதிநிதித்துவமும் 5 சதவீதத்தை தாண்டவில்லை. அதே நேரத்தில் உயர்வகுப்பினர் நிரம்பியுள்ள பொதுப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேராசிரியர் பணியிடங்களில் 85 சதவீதமாகவும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 82 சதவீதமாகவும் உள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் சமூக நீதி எந்த அளவுக்கு சூறையாடப்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் தான் சமூக நீதி சூறையாடல்களுக்கு காரணம். பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளுக்கு ஓபிசி வகுப்பில் தகுதியானவர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் கிரீமிலேயர்கள் என்று கூறி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அவர்களைத் தவிர மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இவ்வளவையும் செய்து விட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இப்படித்தான் சமூக நீதி சூறையாடப்படுகிறது. ஓபிசி வகுப்பினருக்கு முழுமையான சமூக நீதி இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைக்கும் என்பது தெரியவில்லை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்; அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து பணியிடங்களும், பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் மூலம் மத்திய அரசுப்பணிகளெல்லாம் உயர்சாதிகளுக்கே என்பது எழுதப்படாத விதியாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ், பிஜேபி என எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பலன் என்னமோ ஜூரோ தான். அதிலும் குறிப்பாக பிர்தமர் மோடி ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலும் மாற்றம் ஏதுமில்லை நிகழ்ந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Central Govt Job thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண