தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை!
விளம்பரங்கள்
புதிய நிர்வாகிகளுக்கான விருப்பமனு!

புதிய நிர்வாகிகளுக்கான விருப்பமனு!

Radheyan 14 Aug 2023 | 05:04 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தில் புதிதாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு  வாய்ப்பளிக்கும் வகையில் நிர்வாகிகள் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக விருப்பமனு விண்ணப்பம், நேற்று (13.08.2023) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.


சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வந்திருந்த உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவர் நேரடியாக விண்ணப்பத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  குருசாமி,  ரெட்ஹில்ஸ் தங்கவேல், எஸ்.எஸ்.செல்வராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டனர்.


முதற்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் கொல்லவார், தோக்கலவார், சில்லவார் பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து விருப்பமனுக்கல் பெறப்படுகிறது. தவிர பிற மாவட்டங்களிலுள்ள பர்ப்பிள் கிளப், பிளாட்டினம் கிளப், கோல்டன் கிளப் நன்கொடையாளர்களை சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சங்க நடவடிக்கைகளில் ஆண், பெண் பாகுபாடின்றி ஆர்வமுள்ள அனைவரும் சமுதாயப்பணியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு நிர்வாகப் பொறுப்புகளின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 


இது தவிர, சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சங்க விதிகளில் காலத்திற்கும், நிர்வாக நடைமுறைக்குமேற்ப செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார். 

மேலும், விருப்பமனு படிவத்தை உறுப்பினர்களின் இல்லம் தேடி செல்லும் வகையில் அஞ்சல் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 30:ஆம் தேதிக்குள் நிர்வாகத்திற்கு வந்து சேர்வதற்கான கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vkrsns Sangam Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண