தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒளிவிளக்கு கூட்டம்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒளிவிளக்கு கூட்டம்.

Radheyan 31 Aug 2023 | 07:32 PM
பகிர்:

DNT ஒற்றைச்சான்றிதழ் கோரி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதியினர் கடந்த சில வருடங்களாக போராடி வருவது அனைவரும் அறிந்ததே.எடப்பாடி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு காலம் முடிந்துவிட்ட நிலையில் தமிழக முதல்வர் இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளார். இதனை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில் இன்று மாலை ஒளிவிளக்கு கூட்டங்கள் நடத்த டிஎன்டி சமூகங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது குறித்து செயல் தலைவர் அவர்களின் வேண்டுகோள் பின்வருமாறு,

டிஎன்டி உறவுகளுக்கு வணக்கம்.

நமது சமூக பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக  ஒற்றை DNT சான்றிதழ் பெற வேண்டி இன்று மாலை 7 மணி அளவில் ஒளி விளக்கு கூட்டங்கள் நடத்த  சமூக ஆர்வலர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

ஒவ்வொரு ஊரிலும் 10 நபர்களுக்கு குறையாமல் கோசங்கள் எழுப்பி சிறப்பாக நடைபெற செய்ய  வேண்டுகிறேன். ஒளி விளக்கு ஏற்ற அகல் விளக்கு , மெழுகுவர்த்தி, டார்ச் லைட் வெளிச்சம் பயன்படுத்துங்கள்.

நமது கோரிக்கை மிகவும் நியாயமானது, நாம் ஏற்கனவே பெற்று வந்ததை திரும்ப கேட்கிறோம். 

1980ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் DNC என்று உத்தரவு போட்டவர் உடனடியாக 1980 பிப்ரவரி 1ம். தேதி அரசாணை 72 மூலம் திரும்பவும் DNTஎன வழங்கிவிட்டார். இதுவரை நம்மை ஏமாற்றி குழப்பத்துக்கு உள்ளாக்கி பாதிப்பு ஏற்படுத்தி விட்டனர்.

இன்றைய முதல்வர் ஆட்சிக்கு வந்தால் சரி செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். அதைத்தான் தற்பொழுது கேட்கின்றோம். நமது சமுதாயத்துக்கு நியாயமானதை எந்த அரசாங்கமானாலும் நாம் கேட்போம் இதில் யாரும் கட்சி பாகுபாடு பார்க்க வேண்டியதில்லை.     

அன்புடன்,  
P. ராமராஜ் ,   
செயல் தலைவர்,                     
சீர்மரபினர்நலச்சங்கம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு DNT thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண