🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சீர்மரபு பழங்குடி (DNT) சாதியினர் நடத்தும் சமூகநீதிக் கருத்தரங்கம்!

சமூகநீதி, இடஒதுக்கீடு விவகாரங்கள் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் நாடாளுமன்றங்களில் முன் எப்போதும் இல்லாத அளவில் அனைத்து அரசியல் கட்சிகளாலும் பேசப்பட்டு வரும் நிலையில், தொட்டிய நாயக்கர் சமூகம் உள்ளிட்ட 68 டிஎன்டி சமூகங்களுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இணைந்து நடத்தும் சமூகநீதிக் கருத்தரங்கம் நாளை (09.07.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதன் விவரம் வருமாறு,

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபு பழங்குடி (DNT) சாதிகளைச் சேர்ந்த 68 சமுதாயத்தினருக்கு தமிழகத்தில் 1979-வரை DNT சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இது எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் DNC என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அகில இந்திய அளவில் குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட 240-க்கும் மேற்பட்ட சமூகங்களை DNT என்று வகைப்படுத்தி, அம்மக்களின் முன்னேற்றத்திற்காக பலநூறு கோடிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இச்சமூகங்களை சீர்மரபு வகுப்பினர் (DNC) என்று இந்தப்பெயர் மாற்றம் காரணமாக DNT சமூகங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு சிறப்பு சலுகைகளும், நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் உள்ளது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மூன்றாக பிரிக்கப்பட்டு,  அகில இந்திய அளவில் வழங்கப்படும் ஓபிசி இடஒதுக்கீடு அளவான 27% என்பதில் 9 சதவீத இடங்களை டிஎன்டி வகுப்பினருக்கு வழங்க வேண்டும் என்பது ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையாக உள்ளது. இதனால் தமிழகத்தில் 68 சமுதாயங்கள் தங்களுக்கு மீண்டும் டிஎன்டி சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2014 முதல் போராடி வருகிறது.



இதன் காரணமாக கடந்த 2019-இல் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் டிஎன்சி/டிஎன்டி என்று இரண்டு சாதிச்சான்றிதழ்களை வழங்கி பிரச்சினையை மேலும் குழப்பியது. இதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்துவிட்டு அதிமுக ஆட்சியில் டிஎன்சி என்று ஒரு தாளிலும், டிஎன்டி என்று ஒரு தாளிலும் வழங்கியதை ஒன்றிணைத்து ஒரே தாளில் டிஎன்சி/டிஎன்டி என்று ஒரே தாளில் இரண்டு சாதியாக குறிப்பிடும் விநோத முடிவை எடுத்து தங்கள் வாக்குறுதியை நிறவேற்றிவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.

அடிப்படையில் குற்றப்பழங்குடி சாதியினைச் சேர்ந்த் மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தெளிவான பார்வை இல்லாததே இவ்வளவு குழப்பத்திற்கும் காரணமாக இருந்துவருகிறது.  எனவே இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவதற்காக தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளது, அதனடிப்படையில் முதல் முயற்சியாக நாளை சென்னை தியாகராய நகரில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஊடகவியளாளர்களை ஒருங்கிணைத்து கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் அனைத்து டிஎன்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved