🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கைக்கடிகாரத்தில் தேதியை மாற்றக்கூடாது ?

Analog கடிகாரத்துக்குள்ளே Battery, Quartz Crystal இருக்கும். இந்த Quartz Crystal ஒரு விநோதமான பொருள்! ஊஞ்சலை ஆடிவிட்டால், முன்னும், பின்னும் வேகமாக ஆடுமல்லவா?, அப்படித் தான் இந்த Crystal மேல மின்சாரத்தைப் பாய்ச்சினால், அது, ஆடத் தொடங்கிவிடும். அது மட்டுமல்ல, இந்த Crystal மற்றொரு வேலையையும் செய்யும். அதாவது Crystal மேல ஏதாச்சும் அழுத்தம் குடுத்தாL, அது, உடனே அந்த அழுத்தை மின்சாரமா மாற்றும். இப்படி விநோதமா இருக்கும் Crystal தான் ……Piezoelectric Material என்று அழைக்கப்படுகிறது.


புரிந்துகொள்வது கடினமாக உள்ளதா? மறுபடியும் ஊஞ்சலையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஊஞ்சலில் உட்கார்ந்துட்டு இருக்கும் உங்களை, உங்களோட தோழர், ஒரு தடவை ஆட்டிவிடுவதாக வைத்துக்கொள்வோம்… அந்த ஊஞ்சல், எத்தனை தடவை ஊசலாடுதுன்னு உங்களோட இன்னொரு நண்பர் கணக்கு எடுத்துக்கிட்டு இருக்காங்க. அப்போ, உங்க ஊஞ்சல் சுமார் 32761 தடவை ஆடுவதாக எடுத்துக்கொள்வோம். அப்படி ஒவ்வொருமுறையும்  32761 தடவை ஊஞ்சல் ஆடியவுடன், கணக்கெடுக்கும் நண்பர் உடனே அங்க இருக்குற ஒரு கூழாங்கல்லைத் தூக்கி ஒரு பையில் போட்டுக்கொள்வார். இதே செயல்முறை தான், கடிகாரத்துக்குள்ளயும் நடக்குது.

Crystal மேல மின்சாரம் பாய்ச்சும்போது, அது ஊசலாடத் தொடங்கும். 32761 முறை ஊசலாடுதான்னு ஒரு Circuit கணக்கு எடுக்கும். Crystal 32761 ஊசலாடியதும், அந்த Circuit, ஒரு குட்டி மின் அலைத் துடிப்பை (Electric Pulse) உருவாக்கும். அந்த அலைத் துடிப்பு, கடிகாரத்துக்குள இருக்கும் ஒரு சின்ன மோட்டாரை இயங்க வச்சி, “ஹே, உன்கிட்ட இணைக்கப்பட்டு இருக்குற நொடி முள்ளை நகர்த்துப்பா.” என்று சொல்லும். இப்படி தான், ஒரு நொடிக்கு ஒரு தடவை, நொடி முள் நகர்கிறது.


சரி இன்னொரு சேதி தெரியுமா? இரவு 10 மணிக்குமேல, விடியற்காலை 3 மணிக்குள்ளே கடிகாரத்துல தேதியை மாற்றக் கூடாது. இது என்னப்பா, தேதியை மாற்றி வைக்குறதுக்கூட ஒரு குற்றமா? இது பெரிய குற்றம் எல்லாம் இல்லை… சில சமயத்துல, கடிகாரம் ஒழுங்கா வேலை செய்யாமல் போக வாய்ப்பு இருக்கு, அவ்வளவு தான்.

சரி, ஏன் தேதியை மாற்றக்கூடாது? அதைப் பற்றிப் பேசவே இல்லையே! சில கடிகாரங்கள் நேரத்தோட சேர்த்து தேதியும் காட்டும். தேதி, சரியாக இரவு 12 மணிக்கு மாறுமா? அதான் இல்லை. சுமார் 2-3 மணிநேரத்துக்கு முன்னாடி இருந்தே தேதி மாறுவதுக்குத் தேவையான வேலைகளைக் கடிகாரம் செய்ய ஆரம்பிச்சிடும். இந்தச் சமயத்துல, அதுவே தேதியை மாற்றிக்கொண்டு இருக்கும். அந்த நேரத்துல, நாம தேதியை மாற்றி வச்சா, அது கொழம்பிப் போக வாய்ப்பு இருக்கு. அதுனால தான், இரவு 10 மணிக்கு மேல 3 மணிக்குள்ளே தேதியை மாற்றக் கூடாது. ஓ.கே!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved