தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
பாஜக மாவட்ட பொருளாளராக பொன்.ஆனந்தன் நியமனம்!

பாஜக மாவட்ட பொருளாளராக பொன்.ஆனந்தன் நியமனம்!

Radheyan 23 May 2025 | 02:44 PM
பகிர்:

பாஜக மாவட்டப் பொருளாளராக பொன்.ஆனந்தன் நியமனம்!

பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்டம் பொருளாளராக சின்னமனூர் கருணா ஹோட்டல் உரிமையாளர் பொன்.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விபரம் வருமாறு,

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பொன்.ஆனந்தன். புகழ்பெற்ற கருணா ஹோட்டல் உரிமையாளரான பொன்.ஆனந்தன் 2008 முதல் 2017 வரை பாஜக வின் தர்ம ரக்சன சமிதியின் மாவட்ட துணைத் தலைவராகவும், 2019 முதல் 2022 வரை ஏபிசி அணி மாவட்டப் பொருளாளராகவும்,  2022 முதல் இன்று வரை மாநில பொதுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்.

பாஜவின் தீவிர விசுவாசியாகவும், களப்பணியாளராகவும் அறியப்பட்ட பொன்.ஆனந்தன் அடிமட்டத் தொண்டர்கள் முதல் மேல்மட்டத் தலைவர்கள் வரை அன்பைப் பெற்றவர். பாஜக வின் மாநிலத் தலைவராக சமீபத்தில் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. கட்சியின் தீவிர விசுவாசிகளையும், மக்கள் செல்வாக்கு பெற்றவர்களையும் அடையாளங்கண்டு முக்கியப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட பொருளாளராக பொன்.ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட தலைவர் இராஜ பாண்டி, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொன்.ஆனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pon Anandhan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண