தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
தேனி மாவட்டத் தலைவர்களுக்கு முப்பெரும்விழா மலர் விநியோகம்!

தேனி மாவட்டத் தலைவர்களுக்கு முப்பெரும்விழா மலர் விநியோகம்!

Radheyan 06 Jun 2025 | 05:20 PM
பகிர்:

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் 2023-ஜனவரியில் கலைவாணர் அரங்கில் முப்பெரும்விழா நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு "மக்களாட்சியில் இராஜகம்பளத்தார்" என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்பு செய்தனர்.


இம்மலரில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த நடப்பு ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி, நகர மன்ற, மாநகராட்சி உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிப்பொறுப்பாளர்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் முப்பெரும் விழாப்படங்கள், நன்கொடையாளர்கள் விவரங்கள், முப்பெரும்விழாவிற்கு உறுதுணையாக இருந்த பெருமக்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து இரண்டாம் பதிப்பு 2025-ஜனவரியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நன்கொடையாளர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்களுக்கு சங்க நிர்வாகிகள் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக கடந்தவாரம் தேனி மாவட்டத்திலுள்ள உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களுக்கு முப்பெரும்விழா மலர் வழங்கப்பட்டது. ஆண்டிப்பட்டி மாலைகோவில் சங்க செயலாளர் நாகராஜன், எர்ரசக்கநாயக்கனூர் ஜமீன்தார் சாமித்துரை, சௌந்தரபாண்டியன், ஆசிரியர் கிருஷ்ணசாமி, ரமேஷ்பாபு ஆகியோருக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் நேரில் சந்தித்து மலரை வழங்கினார். 


இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மலர்க்கொடி சேகர், பழனிச்சாமி, பண்னீர்செல்வம், ரம்யா சிவரங்கு, செல்லமணி மகாலிங்கம், ஜெகதா ஜெயக்குமார், இராஜாத்தி பாலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், தங்கமணி இராஜேந்திரன், அம்மையப்பன் உள்ளிட்டோருக்கு சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் முப்பெரும்விழா மலரை தேனி மாவட்ட அதிமுக இணையதள அணியின் மாவட்டச் செயலாளர் இமேஷ்பாபு நேரடியாக வழங்கினார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mupperumvizha thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண