🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசு உதவி மருத்துவராக திருமதி.கார்த்திகா நியமனம்!

திருமதி கார்த்திகா நித்தின் சஞ்சய் விருதுநகர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார். இதன் விவரம் வருமாறு,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பி.மனோகரன். விருதுநகர் மாவட்டம் இராஜகோபாலபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனோகரனின் துணைவியார் திருமதி.யசோதா அவர்கள் அரசு உதவிபெரும் பள்ளியில்  ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினரின் மகள் கார்த்திகா சித்த மருத்துவத்தில் இளநிலைப் பட்டம்பெற்று , முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தாம்பரம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பழனி கரட்டுப்பட்டி திரு.ஜெயசீலன் - திருமதி.சாந்தி தம்பதியினரின் அன்புமகனும், சாப்ட்வேர் இஞ்சினியருமான நித்தின் சஞ்சய் கரம்பற்றி இல்லற வாழ்வில் இணைந்தனர்.


இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவருக்கான தேர்வில் வெற்றிபெற்ற திருமதி கார்த்திகா-வை விருதுநகர் ஆவுடையபுரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில் உதவி மருத்துவராக நியமனம் செய்து தமிழக அரசு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி கிருத்திகாவுக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கியதைத் தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி பணியில் இணைந்தார்.

அரசு மருத்துவராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி.கிருத்திகாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved