குரூப் தேர்வில் வெற்றிபெற்ற கெங்கையன் வனக்காவலராக பணி நியமனம்!
விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம்.கெங்கையன் குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து வனக் காவலர் (Forest Gaurd) பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சமுதாயத் தலைவர்கள் கெங்கையனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம், கத்தாளம்பட்டி கிராத்தைச் சேர்ந்த பொன்.முத்துராம் - பொன்.அய்யரக்காள் தம்பதியினரின் மகன் எம்.கெங்கையன். கணிதவியலில் முதுகலை ( M.Sc.,) பட்டம் பெற்ற கெங்கையன் இளங்கலை கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக குரூப் தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்தாண்டு (2024) தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்4 தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகள் நிறைவுபெற்று கெங்கையன் வனக் காவலர் (Forest Gaurd) ஆக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தேனி மாவட்ட வனத்துறையின்கீழ் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை வனச்சரகத்தில் கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
குரூப்4 தேர்வில் வெற்றிபெற்று வனக் காவலராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள கெங்கையனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

