தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
AI தொழில்நுட்பத்தால் சமையல்காரர் வேலைக்கும் ஆபத்து!

AI தொழில்நுட்பத்தால் சமையல்காரர் வேலைக்கும் ஆபத்து!

Radheyan 07 Aug 2025 | 04:37 PM
பகிர்:

ஏஐ-யால் சமையல்காரர் வேலைக்கு ஆபத்தா?

உலக அளவில், செயற்கை நுண்ணறிவு (AI) பல துறைகளை வேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. 

மைக்ரோசாஃப்ட் நடத்திய ஒரு ஆய்வில், கணக்கியல், சட்டம், திட்ட மேலாண்மை போன்ற 'White-Collar' வேலைகள் AI-யால் பெரிதும் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், பிளம்பர், மெக்கானிக், செவிலியர் போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் AI-யால் குறைவாகவே பாதிக்கப்படும் என்றும் அந்த ஆய்வு பட்டியலிடுகிறது.

இதைப் பார்த்த ஒரு வாட்ஸ்அப் குழு உறுப்பினர், "சமையல்காரர் வேலை இந்த பட்டியலில் இல்லையே? சமையல்காரருக்கு AI-யால் என்ன பாதிப்பு வரும்?" என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

இதற்கான பதிலைத் தேடி, ChatGPT-யிடம் கேட்டபோது கிடைத்த பதிலின் சுருக்கம் இங்கே.

பெரிய ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் மெஸ் கிச்சன்கள் போன்ற இடங்களில், AI-யால் இயங்கும் முழு தானியங்கி சமையல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

AI இப்போது புதிய சமையல் குறிப்புகளை உருவாக்குவதற்கும், ஒரு உணவின் சுவையை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப 'Fine-Tune' செய்வதற்கும் உதவுகிறது. 

பல உணவகங்களில், AI இப்போது  ஆர்டர்களை நிர்வகித்தல், பொருட்களின் இருப்பைக் கண்காணித்தல், உணவின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், சமையல் நேரத்தை நிர்வகித்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.

கிளவுட் கிச்சன்கள் (Cloud Kitchens) என்பவை உணவகங்கள் இல்லாமல், ஆன்லைன் ஆர்டர்களுக்காக மட்டுமே உணவைத் தயாரித்து வழங்கும் இடங்கள். இங்கு ரோபோ கைகள் (Robotic Arms) மற்றும் ஸ்மார்ட் சமையல் அமைப்புகள் போன்ற AI கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மனித சமையல்காரர்களின் தேவை கணிசமாகக் குறைந்து வருகிறது.

AI இப்போது உணவு தொடர்பான படைப்புகளை (Content) உருவாக்குவதிலும் உதவுகிறது. மனிதர்களின் உதவி இல்லாமல், முழுவதுமாக AI மூலம் இயங்கும் பல யூடியூப் சேனல்கள் இன்று உள்ளன. இது உணவு தொடர்பான யுடியூபர்களுக்கு ஒரு பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது.

சமையல்காரர் வேலைகளே இப்படி சவால்களை சந்திக்கிற நிலையில் இருக்கின்றன என்றால்,  ஒயிட்காலர் வேலைகளின் நிலையை நினைத்தாலே....?

நன்றி: நியாண்டர் செல்வம்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு AI thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண