தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
மேயர் கரங்களால் தலைநகரில் சிறந்த அலுவலர் விருது பெற்ற மா.துரைக்கு வாழ்த்து!

மேயர் கரங்களால் தலைநகரில் சிறந்த அலுவலர் விருது பெற்ற மா.துரைக்கு வாழ்த்து!

Radheyan 17 Aug 2025 | 12:01 AM
பகிர்:

இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் 79-வது சுதந்திரதினவிழா நேற்று (15.08.2025) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசுத்துறைகளின் சார்பிலும் தனியார் நிறுவனங்களின் சார்பிலும் கொண்டாடப்பட்ட 79-வது சுதந்திரதினவிழாவில் நமது இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் பலரும் தங்கள் துறைகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் திரு. மாப்பிள்ளைதுரை அவர்கள். அதன் விவரம் பின்வருமாறு,

திரு.மாப்பிள்ளைதுரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடசென்னைப்பகுதியின் சுகாதார அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சுகாதரத்துறையில் இவரது சிறப்பான சேவைக்காக வடசென்னைப்பகுதியில் வசித்துவரும் பிரபல அரசியல் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உயரதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் என பலராலும் எப்போதும் பாராட்டப்பட்டுக்கொண்டே இருப்பவர். இந்நிலையில், நாட்டின் 79-வது சுதந்திரதினம் நேற்று கொண்டாடப்பட்டபோது, ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் வணக்கத்திற்குரிய மாநகர மேயர் திருமதி. பிரியா ராஜன் அவர்கள் மாப்பிள்ளைதுரை-க்கு சிறந்த சுகாதார அலுவலர் விருது வழங்கி கௌரவித்தார். அப்போது சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர்கள், மாநகர உறுப்பினர்கள், அதிகாரிகள் மாப்பிள்ளைதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினர் மற்றும் பெருநன்கொடையாளர்களில் ஒருவரான பா.மாப்பிள்ளைதுரை காடல்குடி பாளையக்காரர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும், அந்த வம்சாவளியில் வந்த நல்லப்பசுவாமிகளின் வழித்தோன்றல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்துவரும் இவரது தந்தையார் திரு.பால்ராஜ் நாயக்கர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்  வாதி. மேலும், இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகரும், பர்பிள் கிளப் நன்கொடையாளரும், குமுளி ஏலக்காய் எஸ்டேட் அதிபருமான திரு.ஆர்.மல்லையாசாமி நாயக்கர் மாப்பிள்ளை துரையின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலந்துகொண்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் சிறந்த சுகாதார அலுவலர் விருதுபெற்ற மாப்பிள்ளைதுரைக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சங்கத்தின் மண்டலப்பொறுப்பாளர் ஆறுமுகச்சாமி உடனிருந்தார். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Maappillai durai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண