அமெரிக்காவின் சவாலை சமாளிக்குமா திருப்பூர்?
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்க அரசு 50% வரி விதித்துள்ளது. இதனால் திருப்பூர் நகர வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் இருந்தனர். இது குறித்து ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி திரு.குமார் துரைசாமி தனது முகநூல் பக்கத்தில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,
இந்திய இறக்குமதியில் மீதான அமெரிக்காவின் 50 % வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை நோக்கி பயணிக்கிறது.
திருப்பூரை பொறுத்த மட்டில் மாதம் 2000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் தடைபடும் அபாயம் எழுந்துள்ளது, இது திருப்பூரின் 40 % ஏற்றுமதியாகும். ஒவ்வொரு ஆர்டரும் குறைந்தது 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை பிடிக்கும் அந்த மட்டில் ஏப்ரல் 02 ம் தேதி டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு மற்ற போட்டி உற்பத்தி நாடுகளை காட்டிலும் மிக குறைவாக இருந்த காரணத்தால் இறக்குமதியாளர்கள் இந்தியாவிற்கான ஆர்டர்களை அதிகப்படுத்த துவங்கினர், இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை என்கின்ற காரணத்துடன் 25 % வரியை இந்தியாவின் மீது விதித்தார் டிரம்ப், இது மற்ற போட்டி உற்பத்தி நாடுகளை காட்டிலும் 5 - 6 சதவீதம் அதிகம் இருப்பினும் இறக்குமதியளர்களுடன் உள்ள நல்ல உறவின் காரணமாக ஏற்றுமதி நிறுவனங்களும் இறக்குமதியாளர்களும் பரஸ்பரம் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு உற்பத்தியை தொடர்ந்த நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மீண்டும் ஒரு 25 % வரிவிதிப்பை அறிவித்தார் டிரம்ப்.
இந்த கூடுதல் வரிவிதிப்பு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது , தயாரிப்பில் உள்ள ஆடைகளை 25% வரி என்கின்ற அடிப்படையில் ஆகஸ்ட் வரை அனுப்பிய நிலையில் இனி அனுப்பும் ஆடைகள் 25% கூடுதல் வரியுடன் அனுப்ப வேண்டும் , இறக்குமதியாளர்கள் உடன் பேசி மீண்டும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஆடைகள் ஏற்றுமதியாகும் இந்த சூழல் லாபத்தை குறைப்பதல்ல மாறாக நஷ்டத்தை குறைப்பதற்கான முன்னெடுப்புகளே.இந்த வகையில் தோராயமாக 500-700 கோடி ரூபாய் வரை பொருளாதர இழப்புகள் ஏற்படும்.
அடுத்து வரும் மாதங்களுக்கு உரிய ஆர்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன ஏனெனில் உற்பத்தி நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் மேலும் நஷ்டத்தை சந்திக்க தயாராக இல்லை.
மாற்று சந்தை :
உலகளாவிய சந்தை அமைப்பை முதலில் நன்றாக புரிந்து கொண்டவர்கள் இப்படியான கருத்துக்களை கூறமாட்டார்கள், ஒரு நாட்டின் மக்கள் தொகை, அதன் அமைப்பு, அங்குள்ள மக்களின் நுகர்வு வலிமை போன்றவற்றை அடிப்படையாக கொண்டே வர்த்தக அளவீடுகள் மற்றும் தேவைகள் தீமானிக்கப்படுகின்றன.
அந்த வகையில் அமெரிக்க சந்தைக்கு மாற்றாக வேறு ஒரு சந்தை என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று அதே சமயம் பல சந்தைகளை ஒருங்கிணைத்து அமெரிக்க அளவிலான வர்த்தக அளவீட்டினை ஒவ்வொரு நிறுவனமும் அடைய இயலும் அது உடனடியாக நடப்பது சாத்தியமில்லை குறைந்த பட்சம் 6 மாத காலம் முதல் 1.5 ஆண்டுகள் ஆகும் அதுவரையில் நிறுவனங்களின் அடிப்படை கட்டமைப்பை தக்கவைத்து கொள்ளவேண்டும் , அதன் பொருட்டு ஏற்படும் பொருளாதார தேவைகளை ஈடுசெய்ய இயலும் நிறுவனங்கள் மட்டும் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லும் இயலாத நிறுவனங்கள் மூடக்கூடிய அபாயம் உள்ளது .
வேலை வாய்ப்புகள் பறிபோகுமா என்று கேட்டால் , ஏற்கனேவே 1.5 லட்சம் தொழிலாளர்கள் பற்றாக்குறையுடன் இயங்கிய சூழலில் அமெரிக்க அல்லாத இதர சந்தைகளுக்கும் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் பற்றாகுறையை நிவர்த்தி செய்ய இயலும் இருப்பினும் வேலை நேர இழப்புகளும் அமெரிக்க வரிவிதிப்புக்கு உடனடி தீர்வு ஏற்படவில்லை எனில் அடுத்து வரும் மாத்ங்களில் வேலை இழப்பு ஏற்படக்கூடும்.
வங்கதேசத்திலிருது இறக்குமதியாகும் ஆடைகள் மற்றும் துணிகளுக்கு 12-15% வரி விதிக்கப்பட்டால் 5-6 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை இங்குள்ள நிறுவனங்கள் அந்த வாய்ப்பினை பெற்று தொழிலை தக்க வைக்க ஒரு வாய்ப்பாக அமையும் .
ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் வங்க தேசத்திற்கும் நமக்கும் போட்டி என்பது வங்கதேச இறக்குமதிக்கு யூரோப் வரி விதிப்பதில்லை அதனால் நம்மை காட்டிலும் 7-10% விலை குறைவாக ஆடைகளை கொடுக்க இயல்வதால் நம்மால் போட்டியிட இயலவில்லை தற்சமயம் இந்திய ஆயுத்த ஆடை ஏற்றுமதி தொழில் அதை நம்பியுள்ள பல்வேறு துணை நிறுவனங்கள் ஏராளமான தொழிலாளர்கள், கட்டமைப்பு, வங்கிகளில் பெற்ற கடன் போன்றவற்றை காக்க தற்சமயம் மத்திய அரசு ஏற்றுமதிக்கு அளிக்கும் சலுகைகளை உடனடியாக 10% அளவு உயர்த்தி கொடுத்தால் பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.
இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதியில் 45 லட்சம் தொழிலாளர்கள் ஏராளமான முதலீடுகள் குறிப்பாக 85% சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதுக்கப்படும், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு , கர்நாடகா, மேற்குவங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெருவாரியாக இயங்கி வரும் ஏற்றுமதி நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்.
குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் பிரதானாக இயங்கும் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரண கற்கள் கொண்ட நகை ஏற்றுமதிக்கு 25.08.2025 அன்று 51/2025 என்கின்ற சுங்க அறிவிப்பின் வாயிலாக 22% முதல் 30% வரை ஏற்றுமதிக்கு வழங்கப்படும் டிராபேக் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தேசத்துடன் தங்கம், வெள்ளி மற்றும் ஆபரண கற்கள் கொண்ட நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிற்கவில்லை ஜவுளித்தொழிலில் உள்ள நாங்களும் நிற்கின்றோம் தேசம் எங்களுடன் துணை நிற்கும் என்கின்ற பெரும் நம்பிக்கையுடன்.
தொழில் கட்டமைப்பின் வலிமை என்பது ராணுவ வலிமைக்கு சற்றும் குறைந்தது அல்ல ஏனெனில் பொருளாதாரம் வலுபெறுவது மட்டுமே நம்மை அடக்கி ஆள நினைப்பவர்களை எதிர்கொள்ள ஆக சிறந்த ஆயுதமாக இருக்கும்.
ஜவுளித்துறையின் மீதான மத்திய அரசின் பாராமுகம் வருத்தமளிக்கிறது.
திருப்பூர் சந்திக்கப்போகும் துயர்களில் இருந்து மீண்டுவர ஒவ்வொரு குடிமகனும் திருப்பூர் நிறுவனங்கள் தயாரிக்கும் துணைகளை வாங்கி துணை நிற்போம்.
- குமார் துரைசாமி.

