🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கனிமொழி கருணாநிதிக்கு ஒன்றியச் செயலாளர் நேரில் வாழ்த்து!

திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' பெற தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர், தென்மண்டல பொறுப்பாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களை புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதன் விவரம் வருமாறு,

திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர்'15, அறிஞர் அண்ணாவின் ஆசானும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்'17, திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான தினம் ஆகியவற்றை உள்ளடக்கி 1985 முதல் ஆண்டுதோறும் செப்டம்பர்'17 இல் முப்பெரும்விழாவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தியாகிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கரூர் நகரில் செப்டம்பர்'17-இல் முப்பெரும்விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் முன்னனித் தலைவர்களில் ஒருவரான செந்தில்பாலாஜி செய்துவருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகிவரும் திமுக, இந்த விழாவின் மூலம் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முக்கிய செய்திகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முப்பெரும்விழா விருதுகள் மூலம் மூத்த தலைவர்கள், அறிவுஜூவிகளை கௌரவப்படுத்த பயன்படுத்திக்கொள்கிறது. 

இந்தாண்டு நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் பெரியார் விருதுக்கு கவிஞரும், பகுத்தறிவுவாதியுமான கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா விருதுக்கு சுப.சீத்தாராமன், கலைஞர் விருதுக்கு சோ.மா.இராமச்சந்திரன், பாவேந்தர் விருதுக்கு குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருதுக்கு மருதூர் இராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருதுக்கு பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுப்பட்டியலில் ஒரே ஒரு பெண்ணாக கவிஞர் கனிமொழி மட்டுமே இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து பெரியாரின் பகுத்தறிவுக்கொள்கையின் நீட்சியாகவும், கலைஞரின் இலக்கிய வாரிசாகவும் கருதப்படும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு மிகப்பொருத்தமான பெரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ் அவர்கள் கனிமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved