🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கட்டபொம்மனுக்காக களமிறங்கிய துரைவைகோ!

பாஞ்சை வேந்தனுக்காக பம்பரமாய் சுழன்ற துரைவைகோ!

சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி குரலற்ற மக்களின் அபலைக் குரலை, அதிகார பீடத்தில் எதிரொலித்து, அதிகாரிகளை கனிவோடும், நட்போடும் அணுகி,  கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைத்து, தான் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவதில் வெற்றிகரமான இளம் அரசியல் தலைவர் என பலராலும் பாரட்டப்படுபவர் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ. அதன் விவரம் வருமாறு,

இந்திய அரசியல் வரலாற்றில் வீடுதேடி வந்த அதிகார பொறுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற குறைந்தபட்ச அந்தஸ்துடன், பிரதம அமைச்சரே செய்யத் தயங்கிய காரியங்களை, அவர்களைக் கொண்டே செய்துமுடித்தவர் வைகோ என்பதை குறைந்தபட்ச அரசியல் தெரிந்தவர்கள் கூட அறிந்த ஒன்று. அதற்காக அவர் உழைத்த உழைப்பும், இழந்த பொருளும், செய்த தியாகமும், சந்தித்த துரோகங்களும் ஏராளம். இதையெல்லாம் அப்பாவின் அருகில் இருந்து பார்த்த மகனாக, அரசியல் வாழ்க்கை தன் இயல்புக்கு ஒத்துவராது என்றறிந்து, அரசியல் பக்கமே அடியெடுத்து வைக்காமல் குடும்பம், தொழில் என்றிருந்தவர் தான் துரைவைகோ. 



வாழ்க்கையில் அரசியலே வேண்டாமென்று தேர்வு செய்தவருக்கு, அரசியலே வாழ்க்கையாக அமைத்துக்கொடுத்துள்ளது காலம்.  தொண்டர்களின் அன்புக்கட்டளை, இயற்கை செய்த தேர்வுக்கு கட்டுப்பட்டு அரசியல் களத்தில் நுழைந்தவர் துரைவைகோ, 'காலம்' துரைவகோவின் முடிவை மாற்றினாலும், அவரின் இயல்பை மாற்ற முடியவில்லை. தமிழகம் இதுவரை பார்த்திராத தனித்துவமான அரசியல் தலைவராகத் தான் தற்போதுவரை வலம் வந்துகொண்டிருக்கின்றார் என்றால் மிகையல்ல. 

தமிழகத்தில் எந்தக்கட்சியும் முன்னெடுக்காத போராட்டங்களை கையிலெடுத்து வெற்றிபெற்ற மதிமுகவுக்கு பரிசாகக் கிடைத்தது என்னவோ தேர்தல் தோல்விகள் மட்டும் தான். ஓராண்டு ஈராண்டுகளல்ல கால்நூற்றாண்டுகாலத் தோல்விகள். இந்தத் தோல்விகளெல்லாம் மதிமுகவில் துரைவைகோ காலடி வைக்கும் வரும்வரைதான். மதிமுகவில் துரைவைகோவின் காலம் தொடங்கியதிலிருந்து கட்சிக்கு ஏறுமுகம் என்பதே அக்கட்சித் தொண்டர்களின் கருத்து. தலைவர் வரும்போது மட்டும் ‘அட்டன்டென்ஸ்’ போட்டுவிட்டு, பாசாங்கு செய்பவர்கள் கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர்.  விசுவாசிகளைக் காட்டிலும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கினார். தொடர் சுற்றுப்பயணங்கள் மூலம் கட்சிக்கு புத்துயிரூட்டினார். இதனால் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியபோது துரைவைகோவின் தனித்துவத்தை நாடறிந்தது. பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுபவர்கள் வெற்றி பெற்றபின், அடுத்த தேர்தலின்போதுதான் மீண்டும் வாக்குக்கேட்க தொகுதிக்குள் வருவார்கள் என்ற நிலையை மாற்றி, வார்டு உறுப்பினரைப்போல தொகுதியின் மூளைமுடுக்கெல்லாம் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக ஒன்னரை ஆண்டுக்குள் ரயில்வே, விமானப் போக்குவரத்து, பொதுசுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் துரைவைகோ அற்றியபணிகளை, தனித்தனியாக புத்தகம் போடுமளவிற்கு, எண்ணற்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்து தீர்வுகண்டுள்ளார். குறிப்பாக மக்களைத் தேடித்தேடிச்சென்று நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகண்டு வருகிறார். குறிப்பாக மத்திய, மாநில அரசுத்துறைகளுக்கிடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு, நடக்கவே நடக்காது என்று நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களுக்கெல்லாம் உயிர்கொடுத்துள்ளார். 


ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தன் தொகுதிக்குள் மட்டுமல்லாமல் , ஒரு கட்சியின் தலைவராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரச்சினைகளையும் கையில் எடுத்து தீர்வுகாணத் தவறியதில்லை. அறநிலையத்துறை சம்மந்தப்பட்ட பிரச்சினை, மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினை, போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை என தன்னை நாடிவருவோரின் ஒவ்வொரு பிரச்சினையிலும் தலையிட்டு, கோரிக்கையில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அதை எப்பாடுபாட்டாவது நிறைவேற்றிக்கொடுக்க முயற்சி எடுத்துக்கொள்கிறார். கோரிக்கை வைப்பவர்கள் மறந்தாலும் துரைவைகோ மறப்பதுமில்லை, ஓய்வதுமில்லை என்பது அவரை உற்றுநோக்குபவர்கள் நன்கறிவர்.  அதேசமயம் நடக்காது என்று தெரிந்தால், அதனால் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு வந்தாலும், 'முடியாது' என அப்பொழுதே நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்களிடம் சொல்வதற்கும் தயங்குவதில்லை.

ஆம், துரைவைகோ வின் பாணி இது தான்.

அரசியலுக்காக, அப்பாவி மக்களிடம் நிறைவேற்ற முடியாத எந்தவொரு வாக்குறுதியும் வழங்குவதில்லை.

இவற்றிற்கு இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கந்தர்வக்கோட்டை தொகுதியில் துரைவைகோ வாக்குச் சேகரிக்கச் சென்றபோது, அப்பகுதியில் குடியிருந்துவரும் மக்களில் ஒருபகுதியினர், 'தாங்கள் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடமும், அரசியல் கட்சியினரிடமும் முறையிட்டும் பலனில்லை, வாக்குக் கேட்கும்போது சரி, சரி என்பவர்கள், வெற்றிபெற்றவுடன் மறந்துவிடுகின்றனர். எனவே, நீங்கள் பட்டா பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தால், உங்களுக்கு வாக்களிக்கிறோம்' என்றனர். உடனே அங்கிருந்த கட்சியினரிடம் இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்து, அவர்கள் வசிப்பிடம் ‘நீர்நிலை’ என்று தெரிந்தவுடன், ‘நீர்நிலை’களில் பட்டா வழங்க நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை அம்மக்களிடம் எடுத்துக்கூறி, வாக்குக்காக உங்களை ஏமாற்ற விருப்பமில்லை என்பதை தெளிப்படையாகத் தெரிவித்தது, அப்பகுதி மக்களுக்கோ, உடன் வந்தவர்களுக்கோ மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திற்கே புதுமையாக இருந்தது. 

அதேபோல், வன்னியர் 10.50% இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 68 சமூகங்களின் டிஎன்டி ஒற்றை சாதிச்சான்றிதழ் கோரிக்கையை கூட்டணிக்கட்சி என்ற வகையில்  தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகாணும்படி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் துரைவைகோவி அவர்களைச் சந்தித்து முறையிட்டபோது, முழுவிவரத்தைக் கேட்டறிந்தவர் 'தற்போதைய சூழலில் இப்பிரச்சினையில் முதல்வரின் கவனத்தைப்பெறுவது சிரமம், சட்ட சிக்கல் இல்லாத வேறு ஏதாவது அத்தியாவசியப் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று செய்துதருகிறேன்' என்றார். அவரைப்பொறுத்தவரை எது நடக்கும், எது நடக்காது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார். மக்களை அழைக்கழிக்க விரும்புவதேயில்லை.


ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சமூகநீதிக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒற்றைச்சான்றிதழ் பிரச்சினைக்காக துரைவைகோ அவர்களைச்  சந்தித்து கோரிக்கை வைத்தபோது, உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் அழைத்துச்சென்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து ஒற்றை சாதிச்சான்றிதழ் சம்மந்தமாக அரசு அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தான் தற்போது கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டபம் சீரமைத்துதரக்கோரும் விவகாரத்திலும் உடனடியாகத் தலையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் துரைவைகோ.

கயத்தாறு கட்டபொம்மன் மணிமண்டப சுவர்களில் சிமெண்ட் பூச்சு வலுவிழந்து கீழே விழுந்தபடியே உள்ளது. மேலும், கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தால் மணிமண்டபத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மின்சார ஒயர்கள் பழுதடைந்துள்ளதால் மின்விளக்குகள், மின்விசிறிகளின்றி மணிமண்டபம் களையிழந்து காணப்படுகிறது. இப்பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண முயன்றுள்ளர் கே.எஸ்.குட்டி நினைவு அறக்கட்டளையினர். இதுசம்மந்தமாக ஆட்சியருக்கு மனு அளித்துக் காத்திருந்த நிலையில், கடந்த அக்டோபர்’16 இல் மாவீரன் கட்டபொம்மனாரின் நினைவுநாளன்று கயத்தாறு மணிமண்டபத்திற்கு வந்த துரைவைகோவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கம்பளத்தாரின் கோரிக்கையை மனதில் நிலைநிறுத்திக்கொண்ட துரைவைகோ, சந்தர்ப்பம் வரும்போது அழைப்பதாகத் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். எப்படியும் ஒருசில ஆண்டுகளுக்குள் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை வைத்தவர்கள் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால் துரைவைகோ அவர்களைப் பொறுத்தவரையில், பிரச்சினையை அவரிடம் கொண்டு சேர்த்துவிட்டால் போதும், கோரிக்கை வைத்தவர்கள் அத்தோடு நிம்மதியாக உறங்கச் செல்லலாம். அதன்பிறகு துரைவைகோ உறங்குவதே இல்லை. அதைதான் திருச்சியில் பார்க்கிறோம். மக்களும் அதைத்தான் சொல்கின்றனர்.

மணிமண்டப சீரமைப்பு விசயத்திலும் இதுதான் நடந்துள்ளது. 

அறக்கட்டளையினர் துரைவைகோவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். ஆனால் இவ்வளவு சீக்கிரம் துரைவைகோவிடமிருந்து அழைப்பு வருமென்று நம்பவே இல்லை.

ஆம், நேற்று முன்தினம் (09.11.2025) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி திருநெல்வேலி செல்ல வேண்டும். 

தூத்துக்குடி என்றால் துரைவைகோ அவர்களுக்கு 'கட்டபொம்மன்' ஞாபகம் வரமால் போகுமா?

மணிமண்டபம் சீரமைப்பு சம்மந்தமாக ஆட்சியரைப் பார்த்துவிடலாம்…

ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்…

அன்று 'ஞாயிற்றுக்கிழமை' விடுமுறை தினம் என்பதே...

தூத்துக்குடி சென்றடைய மாலை 5 மணி ஆகிவிடும்.... 

மாவட்ட ஆட்சியர் ஓய்வெடுக்கும் நேரமாக இருக்குமே? ...

நல்லோருக்கு ஏது நாளும், பொழுதும்? 

சென்னையிலிருந்து புறப்படும் முன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தொலைப்பேசியில் தொடர்புகொள்கிறார்.

ஆம், நினைத்தது போலவே ஆட்சியர் ஞாயிறு விடுமுறையில்….

அவருக்குத் தெரியாதா என்ன?... அப்பாவைப்போலத்தான் பிள்ளையும் இருப்பாரென்று…

கரீபியன் தீவில் ஏற்பட்ட புயலில் இந்தியப் பிரஜைகள் மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டபோது, நள்ளிரவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை எழுப்ப அதிகாரி தயங்கியபோது, பிரதமரிடம் என் பெயரைச் சொல்லுங்கள் என்று சொல்லி, உடனடியாக இந்திய அரசையும், அமெரிக்க அரசையும் ஒருசேர செயல்பட வைத்து பல உயிர்களைக் காப்பாற்றியவரின் வாரிசாயிற்றே…. 

அப்பா அழைத்து இந்தியப் பிரதமரே கோபித்துக் கொள்ளாதபோது, இந்திய ஆட்சிப் பணியாளர் கோபித்துக் கொள்ளவா போகிறார்?... 

ஓன்றும் பிரச்சினையில்லை, நீங்கள் வரும்போது நானும் அலுவலகம் வந்துவிடுகிறேன் – மாவட்ட ஆட்சியர்.

எவ்வளவு பொறுப்புள்ள ஆட்சியர். உண்மையில் தூத்துக்குடி மக்கள் மகிழத்தானே வேண்டும்!. 

துரைவைகோ-விடமிருந்து அடுத்த அழைப்பு கோரிக்கை வைத்த கே.எஸ்.குட்டி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு.…

மாலை 5 மணிக்கு நிர்வாகிகள் ஐந்து பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகம் வந்துவிடும்படி இன்ப அதிர்ச்சி அளிக்கிறார்…

விமான நிலையத்திலிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற துரைவைகோ, அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கோவில்பட்டியில் 5000 முன்னாள் இராணுவ வீரர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்காக அந்த சங்க நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்திக்கின்றார்,

அப்போது, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மானாரின் மணிமண்டபத்தை சீரமைத்து, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர பணிகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும், மேலும் மணிமண்டபத்திற்கு வெளியே பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்கொடை உள்ளிட்ட வசதிகளை செய்துதருமாறும் வேண்டுகோள் வைக்கின்றார். மாவட்ட ஆட்சியர் 'சிறப்புக்கவனம் செலுத்தி உடனடித்தீர்வு காண்பதாக நிர்வாகிகள் முன் உறுதிமொழி அளிக்கின்றார்.  ஆகவே, மாவீரன் கட்டபொம்மனாரின் மணிமண்டபத்தைச் சீரமைப்பதற்கான முதற்கட்டப்பணியினை செய்துமுடித்துள்ளார் துரைவைகோ.

மாவட்ட ஆட்சியருடனான துரைவைகோவின் சந்திப்பின்போது, வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, துணைத்தலைவர் முருகபூபதி, கே.எஸ்.குட்டி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செண்பகராஜ், கிருஷ்ணசாமி, சுப்பிரமணி, ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சி மக்களைப்போல் நாமும் நம்பிக்கை கொள்வோம். ஆம், கோரிக்கை வைத்தவர்கள் தூங்கினாலும் துரைவைகோ தூங்குவதில்லை. எனவே கயத்தாறு மணிமண்டப சீரமைப்புப் பணிகள்  விரைவில் தொடங்கும் என்று நம்புவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved