தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
பாஜக ஒன்றியத் தலைவராக சண்முகம் குமார் நியமனம்!

பாஜக ஒன்றியத் தலைவராக சண்முகம் குமார் நியமனம்!

Radheyan 03 Dec 2025 | 12:11 AM
பகிர்:

கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு ஒன்றிய தலைவராக இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த சண்முகம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,

கோவையை அடுத்த மாச்சேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் குமார். பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகாலம் பயணித்துவரும் சண்முகம் குமார் மதுக்கரை ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளராகப் பணியாற்றிவந்தார். இதனைத்தொடர்ந்து ஒன்றியத் துணைத்தலைவராகவும், ஒன்றிய ஓபிசி அணி பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றிவந்தார்.

இதற்கிடையே தற்போது பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் ஒன்றியத் தலைவராக சண்முகம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சண்முகம் குமாருக்கு வீரபாண்டிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், கோவை மாவட்டஒருங்கிணைப்பாளர் கே.டி,மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் மக்கள் குரல் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு shanmugamkumar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண