தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
குரூப் தேர்வில் வெற்றி - கிராம நிர்வாக அலுவலர் செல்வி. இனிய சக்திக்கு வாழ்த்துகள்!

குரூப் தேர்வில் வெற்றி - கிராம நிர்வாக அலுவலர் செல்வி. இனிய சக்திக்கு வாழ்த்துகள்!

Radheyan 09 Dec 2025 | 07:11 PM
பகிர்:

குரூப் 4 தேர்வில் வெற்றிக்கனியைப் பறித்து கிராம நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வி.இனிய சக்தி-க்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திரு.கண்ணன் (எ) காந்தாமணி. நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளையின் செயலாளரும், முன்னாள் நில அளவையாளருமான பொ.துரைசாமி அவர்களின் இளைய சகோதராரன திரு.காந்தாமணி அவர்களின் இருமகள்களின் மூத்தவரான செல்வி. இனிய சக்தி, தனது பட்டப்படிப்பிற்குப்பிறகு கடந்த இரண்டுவருடங்களாக போட்டித்தேர்வுகளுக்கு  தயாராகி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு எழுதிய இனிய சக்தி, அதில்  வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (08.12.2025) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்ட இனிய சக்தி-க்கு சேலம் மாவட்டத்தில் கிராம அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலராகப் பொறுப்பேற்கவுள்ள செல்வி. இனிய சக்தி-க்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்-சென்னை தலைவர் செ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு inia sakthi thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண