பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக என்.செந்தில் நியமனம்!
கோவை தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக போத்தனூரைச் சேர்ந்த என்.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள செந்தில் அவர்களின் பணிசிறக்க சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் என்.செந்தில். இவர் பாரதிய ஜனதா கட்சியின் குறிச்சி மண்டல செயலாளராகப் பொறுப்புவகித்துள்ளார். கோவையில் கட்டுமானப்பொருட்கள் விற்பனையகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் செந்தில், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றவர்.
இந்நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்டமைப்பில் நடைபெற்றுவரும் மாறுதல்கள் மற்றும் நியமனங்கள் அடிப்படையில் என்.செந்தில் அவர்கள் கோவை தெற்கு மாவட்ட ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

