தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
பன்னெடுங்கால ஆதிக்கத்தை உடைத்து தனியொருவனாக சாதித்தார் மயில்சாமி!

பன்னெடுங்கால ஆதிக்கத்தை உடைத்து தனியொருவனாக சாதித்தார் மயில்சாமி!

Radheyan 29 Jan 2026 | 07:37 PM
பகிர்:

கோவை மாவட்டம் ஈச்சனாரியைச் சேர்ந்த திரு.மயில்சாமி கோவை மாநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சமுதாயப்பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

கோவை ஈச்சனாரியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் ஆந்திரா, கர்நாடகா மற்றும் இதர தென்மாநிலங்களில் இருந்து தக்காளி மொத்தமாகக் கொள்முதல் செய்து, கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்துவருகிறார். இதற்காக கோவை சுந்தராபுரத்தில் எம்.ஆர். காய்கறி கமிஷன் மண்டி நடத்தி வருகிறார். இங்கிருந்து நாச்சிபாளையம், கவுண்டம்பாளையம், உக்கடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காய்கறி சந்தைகளுக்கு நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். காலங்காலமாக பிற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திவரும்  கோவையின் பிரதான காய்கறி சந்தைகளில் தனது கடின உழைப்பால் தவிர்க்கமுடியாத சக்தியாக மயில்சாமி உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் கோவை மாநகரில் இயங்கிவரும் இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளராக மயில்சாமி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தனியொருவனாக சந்தையில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ள மயில்சாமி-க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Myilsamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண