🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக கே.எம்.விஜயகுமார் நியமனம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கே.எம்.விஜயகுமார், திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முன்னனி தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இதன் விவரம் வருமாறு,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கேத்தம்பாளையம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கே.எம்.விஜயகுமார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து எம்பிஏ பட்டதாரியான விஜயகுமார், ஆரம்பம் முதலே திமுகழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கிளைக் கழகம் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி வந்தார். தற்போது கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளில் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக துணைமுதல்வரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், தொடர்பிலுமுள்ள இளைஞரணிப் பொறுப்பாளர்கள் நியமனம், அவரது நேரடி ஒப்புதல் பெற்று நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுகழகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துணை அமைப்பான இளைஞரணியில், ஈரோடு வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராக கே.எம். விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதனைத்தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட, வட்ட, ஒன்றியக் கழக முன்னனி நிர்வாகிகளை விஜயகுமார் நேரடியாகச் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அதேபோல் கட்சிப்பிரமுகர்களும், சமுதாயப் பிரமுகர்களும் விஜயகுமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தவிர, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரான கே.எம்.விஜயகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு, சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  நீண்ட காலத்திற்குப்பிறகு இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த அரசியலில் வளர்ந்து வரும் இளந்தலைவர் ஒருவருக்கு,  மாவட்ட அளவிலான பொறுப்பு வழங்கியுள்ள கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்டக் கழக செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் .

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved